வந்தாரை வாழ வைக்கும் மண் என்று சிலாகித்துப் பேசப்படும் புத்தளம் மற்றும் அங்கு வாழும் மக்களை கௌரவிக்கும் முகமாகவும், அவர்களுக்கு செய்யும் ஒரு நன்றிக் கடனாகவும் தமது கட்சிக்கு கிடைத்த ஒரேயொரு தேசியப் பட்டியல் பாராளுமன்ற ஆசனத்தை மூத்த அரசியல்வாதியான அல்ஹாஜ் எம்.எச்.எம்.நவவிக்கு வழங்கியமைக்காக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் அல்ஹாஜ் ரிஷாத் பதியுதீன் அவர்களுக்கு புத்தளம் மக்கள் சார்பாக எமது இதயபூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
உண்மையில் இந்த தேசியப் பட்டியல் பாராளுமன்ற ஆசனத்தை புத்தளம் மண்ணுக்கு வழங்குவதற்கு அவர் தனது கட்சிக்குள் பலத்த சவால்களை சந்திக்க நேர்ந்ததை நாம் அறிகிறோம். இருந்தும் கட்சியா, தனி நபரா என்ற நிலைக்கு அப்பால் சமூகம் சார்ந்த ரீதியில் அவர் இந்த முடிவை எடுத்துள்ளமையை நாம் வெகுவாக பாராட்டுகிறோம். குறிப்பாக அக்கட்சியில் கிழக்கில் போட்டியிட்ட வேட்பாளர்கள் புத்தளத்தின் நிலையை யதார்த்தபூர்வமாக புரிந்து, ஒருமித்து இதற்கு இணக்கம் தெரிவித்தமை அவர்களது அரசியல் முதிர்ச்சி மற்றும் பரந்த மனப்பான்மையை பறைசாற்றுகிறது.

மேலும் வன்னியில் போட்டியிட்டு ரிஷாத் பதியுதீனுக்கு அடுத்ததாக உள்ள வேட்பாளர் தனக்கு அசௌகரியமான நிலை ஏற்பட்டும் கூட புத்தளத்து விடயத்தில் தனது நிலைப்பாட்டில் சாதகமான போக்கை கொண்டிருந்ததை அவதானிக்க முடிந்தது. ஒட்டு மொத்தமாக எல்லா தரப்பாரும் மனமுவந்து இந்த கைங்கரியத்தை செய்ய வேண்டும் என்று தான் நாம் மிகவும் எதிர்ப்பார்த்தோம். இறைவன் அருளால் அது ரிஷாத் பதியுதீன் தலைமையில் சாத்தியமானதை இட்டு நாம் மிகவும் மகிழ்வுறுகிறோம். நன்றி தெரிவிக்கிறோம்.
இந்த எம்.பி. நியமனம் புத்தளம் மாவட்ட முஸ்லிம்கள், தமிழர்கள், புத்தளம் பிரதேசத்தில் வாழும் இடம் பெயர்ந்த மக்கள், புத்தளம் தொகுதி சிங்கள மக்கள் ஆகியோருக்கு பயன்பட வேண்டும் என்பதுவே எமது பேரவாவாகும். அனைத்து இன மக்களின் அபிலாஷைகள், எதிர்ப்பார்ப்புக்கள் நிறைவேற இந்த எம்.பி எனும் பரிசு பயன்படுத்தப்பட வேண்டும் என்று நாம் அன்பாக கோரிக்கை விடுக்கிறோம்.
எஸ்.ஆர்.எம். எம். முஹ்ஸி
முன்னாள் புத்தளம் நகர சபை உறுப்பினர்
சமூக ஆர்வலர்

0 Comments