Subscribe Us

header ads

"அதிர்ச்சித் தகவல்" முஸ்லிம் மாணவர்களின், இஸ்லாம் பாடநூலை நெறிப்படுத்திய ஞானசாரர்


-நஜீப் பின் கபூர்-

தற்போது முஸ்லிம் மாணவர்கள் பாடசாலைகளில் பாவிக்கின்ற இஸ்லாம் பாடத்துக்கான கைநூல் பொதுபல சேன அமைப்பினரின் நெறிப்படுத்தலின் கீழ் தயாரிக்கப்பட்டது என்பதனை இந்தக் குறிப்பை  jaffna muslim இணையம் மூலம் பொறுப்புடன் அறியத் தருகின்றறேன்.

நேற்று 24.08.205 இரவு ஒரு தனியார் தொலைக் காட்சி நிறுவனத்தின் கலந்துறையாடலொன்றில் கலந்து கொண்ட போது பொதுபல சேன அமைப்பின் செயலாளர் இதனை உறுதிப்படுத்தினார்.

அவர் கருத்துப்படி,

 இலங்கையில் அரசாங்கத்தால் பாடசாலைகளில் முஸ்லிம் மாணவர்ககுக்குக் கொடுக்கப்பட்டுள்ள இஸ்லாம் பாடத்துக்கான கைநூலில் நிறைத் தவறான தகவல்கள் வழங்கப்பட்டிருந்தது.  அவற்றை நீக்கிக் கொள்ளுமாறு பல வருடங்களாக முயற்ச்சிகள் மேற் கொள்ளப்பட்ட போதும் அது கைகூட வில்லை.

கடந்த வருடம் நாம் மேற் கொண்ட கடுமையான முயற்சியின் பின்னர் அந்தத் தவறுகள் நீக்கப்பட்டு இந்த வருடம் தவறு சரி செய்யப்பட்டு, புதிய இஸ்லாம் பாட நூல் வெளியிடப்பட்டுள்ளது. இது எமக்குக் கிடைத்து பெரு வெற்றி என்று அந்தப் பாடநூலை தொலைக் காட்சியில் தூக்கிப் பிடித்துக் காட்டினார் ஞானசாரத்தேரர்.

அப்படியானல் நாங்கள் எழுப்புகின்ற கேள்வி இஸ்லாம் பாடநூலைத் தயாரிக்கின்ற அதிகாரிகள் பிழையான தகவல்களை வழங்கி இருந்தார்களா? அப்படியானால் அது ஏன்? அவை எவை?

அல்லது உண்மையான தகவல்களை ஞானசாரரின் அச்சுறுத்தல்களுக்கு அடிபணிந்து முஸ்லிம் அதிகாரிகள் நீக்கிக் கொண்டார்களா?

தாங்களுக்கு இது விடயத்தில் அழுத்தங்கள் கொடுக்கப்பட்டிருந்தால் ஏன் இதனை முஸ்லிம் அதிகாரிகள் சமூகத்திற்கு முன் அறிவிக்காமல் மௌனம் காத்தார்கள்?

ஜம்மியத்துல் உலமா சபை மற்றும் முஸ்லிம்களின் உரிமைகள் பற்றிப் பேசுகின்ற அரசியல் தலைமைகள் இது பற்றி அறிந்திருந்தார்களா என்று நாம் கேள்வி எழுப்புகின்றோம். இதன் உண்மைத் தன்மையை அறிந்து கொள்ளும் உரிமை முஸ்லிம் சமூகத்திற்கு இருக்கின்றது. இதுபற்றி சம்பந்தப்பட்டவர்கள் சமூகத்தை உடனடியாகத் தெளிவு படுத்த வேண்டும்...!

நன்றி : Jaffna Muslim

Post a Comment

0 Comments