தேசிய அரசாங்கத்தை உருவாக்குவது தொடர்பான நாடாளுமன்ற விவாதம் ஒன்றை நடத்த தயாராக இருப்பதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.
அதன் தவிசாளர் மலிக் சமரவிக்ரம இதனைத் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் முதலாம் திகதி இலங்கையின் எட்டாவது நாடாளுமன்றத்தின் கன்னி அமர்வு நடைபெறவுள்ளது.
இதன் போது தேசிய அரசாங்கம் தொடர்பான பிரேரணை ஒன்றை பிரதமர் ரணில்விக்ரமசிங்க முன்வைக்கவுள்ளார்.
இதன் போது இது குறித்த ஒத்திவைக்கப்பட்ட விவாதம் ஒன்றை ஜே.வி.பி கோர எதிர்பார்த்திருப்பதாக அதன் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி தெரிவித்துள்ளார்.
அதன் அடிப்படையில் இந்த விவாதத்துக்கு சந்தர்ப்பம் வழங்க தயாராக இருப்பதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.
அதேநேரம் புதிய அமைச்சரவை பதவி ஏற்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 4ம் திகதி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


0 Comments