ஸ்ரீ லங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கம் கடந்த 3 தசாப்தங்களுக்கு மேலாக மாணவ இளைஞர்களின் கல்வி மற்றும் பண்பாட்டு மறுமலர்ச்சிக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது.
அந்தவகையில் எமது வருடாந்த நிகழ்சி நிரலின் ஓர் அங்கமாக க.பொ.த உயர்தரப் பரீட்சையினை எழுதிய மாணவர்களுத்கென 7 நாள் வதிவிடப் பயிற்சி நெறியாக நடாத்தபப்டபடுகின்ற Youth Development Program (YDP) இவ்வருடமும் செமடம்பர் மாதம் 11ம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் 06 இடங்களில் நடைபெற ஏற்பாடாகியூள்ளது.
நிகழ்சித் திட்டமானது அடிப்படை மார்க்க அறிவூ, எதிர்கால கல்வி தொடர்பான வழிகாட்டல, திறன் விருத்தி போன்ற பல்வேறு அம்சங்களையூம் உள்ளடக்கியிருப்பதனால் சமூகத்தின் பல மட்டங்களிலும, குறிப்பாக துறைசார்ந்தவர்கள் பெற்ரார்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும் இப்பயிற்சி நெறியின் முடிவில் முஸ்லிம் சமய கலாசார பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் அனுமதியூடன் அரச அங்கீகாரம் பெற்ற சான்றிதல் வழங்கப்படும்.
மேலதிக விபரங்களைப் பெற கீழ்வரும் இலக்கங்களை தொடர்புகொள்ள முடியூம்.
சகோ.ஹம்தி அஹமட் – 077 4243159
சகோ.கவ்வாம் – 075 2121413
L. Zumri Mohammed
Media Secretary
Media Unit
Sri Lanka Islamic Students’ Movement


0 Comments