குருநாகலில் கூடிய விருப்பு வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ள போதிலும் பிரதமராகும் எண்ணத்தில் தேர்தலில் குதித்த மஹிந்த ராஜபக்சவும் ஆட்சியைக் கைப்பற்றும் நோக்கில் களமிறங்கிய அவரது கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் தோல்வி கண்டுள்ளது.
இதேவேளை ஐக்கிய தேசிய கட்சியின் உத்தியோகபூர்வ பிரதமர் வேட்பாளராக ரணில் விக்கிரமசிங்க போட்டியிட்ட நிலையில் ஐமசுமுவின் பிரதான வேட்பாளராக உத்தியோகப்பற்றற்ற முறையில் மஹிந்த ராஜபக்சவே காட்சிப்படுத்தப்பட்டிருந்தர். எனவே தேர்தலில் இருவருக்குமே போட்டியிருப்பதாக கருதப்பட்டது.
இந்நிலையில் குருநாகலில் மஹிந்த ராஜக்ச 423,529 பெற்றிருந்ததோடு கொழும்பில் ரணில் விக்கிரமசிங்க 556,600 வாக்குகளைப் பெற்றிருந்தார். ஆயினும் விகிதாசாரப்படி குருநாகலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பெற்ற 474,124 மொத்த வாக்குகளில் 423,529 (89 வீதம்) வாக்குகள் மஹிந்த ராஜபக்ச பெற்றிருப்பதோடு கொழும்பில் ஐக்கிய தேசியக் கட்சி பெற்ற 640,743 வாக்காளர்களின் 78 சதவீத ஆதரவினை ரணில் விக்கிரமசிங்க பெற்றுள்ளார்.
எனவே, ஆகக்குறைந்தது விகிதாசார ரீதியில் குருநாகலில் ஐமசுமுவுக்கு வாக்களித்த ஒவ்வொருவரும் மஹிந்த ராஜபக்சவுக்கு வாக்களித்துள்ளமையைக் கொண்டு அவரது தரப்பு திருப்தி காண்கிறது. எனினும மஹிந்த ராஜபக்சவுக்கு குருநாகலில் கட்சிக்குள் தயாசிறியைத் தவிர வேறு நேரடி போட்டியிருக்கவில்லையென்பதும் பெரும்பாலும் ஐக்கிய தேசிய கட்சியின் முக்கிய புள்ளிகள் யாவரும் கொழும்பிலேயே போட்டியிட்டமையும் கருத்திற்கொள்ளத்தக்கது என ஐதேக பிரமுகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.


0 Comments