UNPக்கு சுமார் 64000 முஸ்லிம் வாக்குகள் விழுந்துள்ளன..... UNPயில் கேட்ட மூவரும் நேர்மையாகவும்.... உண்மையாகவும் நடந்து..... மூவருக்கும் விருப்பு வாக்குகளைக் கேட்டிருந்தால்........ மூவரும் பாராளுமன்றம் சென்றிருக்கலாம்....... ஆனால் அவர்கள் அப்படி செய்யவில்லை......அப்படி செய்யவும் மாட்டார்கள்.....
இது இந்த முறை மட்டுமல்ல..... காலம் காலமாக இப்படித்தான் நடந்து வருகிறது. .... சமூக அக்கறையில்லாத சுயநலவாத அரசியல்வாதிகள் இருக்கும் வரை எமக்கு விடிவு கிடையாது.....
கடைசிவரை நவவி முதலிடத்தில் உள்ளார்.... நஸ்மி இரண்டாம் இடத்தில் உள்ளார்..... நாம் வென்றுவிட்டோம் என பதிவிட்ட நீங்களும் உங்கள் சகாக்களும்...... உங்கள் பதிவுகள் மக்களை ஏமாற்றுவதற்கே பதிவு செய்யப்பட்டன என்பது தெரிந்தும்.... மக்களை தவறாக வழி நடாத்தியிருக்கிறீர்கள்......
அதே போன்று நீங்கள் சொன்னது போல் இடம்பெயர்ந்த வாக்காளர்களின் 18000 வாக்குகளுக்கு என்ன நடந்தது....????
ஒட்டக அணி சார்பாக நாம் கூறியது ஒரே விடயம் தான்..... ஒட்டக அணிக்கு 17000 வாக்குகள் கிடைத்தால் போதும்..... ஒரு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினரைப் பெற்றுக் கொள்ளலாம்..... ஆனால் பெரும்பான்மைக் கட்சிகளிலிருந்து எந்த முஸ்லிம் பிரதிநிதியும் பாராளுமன்றம் செல்ல முடியாது..... நாம் சொன்ன விடயம் இன்று நிரூபிக்கப்பட்டுள்ளது.....
ஏனெனில் நாம் சொன்னவைகள்.... எம்மால் கற்பனையாக புனையப்பட்ட கதைகளல்ல...... அவை கடந்த கால அனுபவத்தில் நாம் கண்ட நிஜங்கள். ......
UNPமுஸ்லிம் வேட்பாளர்களுக்கு 1100வாக்குகளல்ல...... இன்னும் 10000 வாக்குகள் கிடைத்தாலும் அவர்கள் பாராளுமன்றம் சென்றிருக்க முடியாது...... காரணம்..... அவ்வாக்குகள் குறைந்தது மூன்றாகப் பிரியும்..... அந்த மூன்றில் ஒரு வாக்குகளில் இரு வாக்குகள் சிங்களவர்களுக்கு வழங்கப்படும்...... முஸ்லிம்கள் 3300 வாக்குகள் கூடும் போது...... சிங்களவர்களுக்கு நாம் அளித்த 10000வாக்குகள் 20000 விருப்புவாக்குகளாக மாறும்..... இதை சரியாகப் நம் சமூகம் புரிந்து கொள்ளாதவரை..... இந்நிலை நீடிக்கும்......
இதற்கான மாற்றுவழியாகத்தான்... ஒட்டகக் கூட்டணி களமிறங்கி 17000 வாக்குகளை கேட்டு நின்றது.....64000 வாக்குகளை UNPக்கு வழங்கிவிட்டு ஒரு பாராளுமன்ற உறுப்பினரையாவது பெற முடியாமல் போன....... அந்த வாக்குகளில் மக்கள் 7000 வாக்குகளை ஒட்டகக் கூட்டணிக்கு வழங்கியிருந்தால்...... நிச்சயமாக எமக்கான உறுப்பினர் னரை நாம் தெரிவு செய்திருக்கலாம்...... இது இறைவனின் நாட்டம்....
எனவே.... அற்ப ஆசைகளுக்காக மீண்டும் மீண்டும் மக்களைத் திசைதிருப்பி...... எமது மாவட்டத்தின் எமக்கான உரிமைகளைப் பறிப்பதை உடனடியாக நிறுத்திவிட்டு..... எம்மை நாமே ஆள்வதற்கு வழிவிடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்......
-Kamardeen Mohamed Fairoos-


0 Comments