நம்மை அழகாய் காண்பித்துக் கொள்ள யாருக்குதான் ஆசையிருக்காது? மேக்கப் மீது ஆர்வமுள்ள ஒருவர் தனது அழகு ரகசியத்தையோ, வயதையோ அவ்வளவு சீக்கிரம் வெளியில் சொல்ல விரும்பமாட்டார்கள்.
அமெரிக்காவின் தென் பகுதியில் அமைந்துள்ள டென்னஸ்ஸி உள்ள மாநிலத்தில் வசித்துவரும் மெலிஸ்ஸா என்பவரை யூடியூப் பக்கத்தில் அழகு குறிப்புகள் சொல்லும் மெலிஸ்ஸா55-ஆக சிலருக்கு நினைவிருக்கலாம்.
இவரது வயது என்னவாக இருக்கும்? என யூகிக்கச் சொன்னால், நீங்கள் அதிகபட்சம் 40 இருக்கலாம் என மதிப்பிடுவீர்கள். ஆனால், தனக்கு 60 வயது ஆகிறது என்ற உண்மையை சமீபத்தில் வெளியிட்டுள்ளார் மெலிஸ்ஸா. தனது இரு பிள்ளைகள் மூலம் பிறந்த மொத்தம் 7 ஏழு குழந்தைகளுக்கு பாட்டியாகியுள்ளார் மெலிஸ்ஸா.
அவரது இளமைக்கான ரகசியம் தொடர்பாக கேட்டவர்களுக்கு ’இதுவரை அழகை மேம்படுத்த சிகிச்சைகள் எதுவுமே மேற்கொண்டதில்லை’ என பதிலளித்திருக்கிறார். குடும்பத்தின் மீது மிகுந்த அக்கறை கொண்ட மெலிஸ்ஸா வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் தனது ஒட்டுமொத்த குடும்பத்துக்கும் சமைத்துப்போட்டு, ஒன்றாக அமர்ந்து உணவருந்தி மகிழ்வதாக குறிப்பிட்டார்.


0 Comments