மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் வெற்றியாளர்களாக எவ்வாறு நல்லாட்சியில் மாறமுடியும். இந்த விடயத்தில் மைத்திரி தலமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தவறு இளைத்துள்ளது. இச் செயற்பாடு மக்களின் ஜனனாயக உரிமையை கேள்விக்குறியாக மாற்றி, மக்கள் மீது பயத்தினை உருவாக்கும.; தோல்வியடைந்த ஹிஸ்புல்லாவின் பெயர் தேசியப்பட்டியலில் பிரேரிக்கப்பட்டவுடன் காத்தான்குடியில் ஏற்பட்ட விரும்பத்தகாத சம்பவங்கள் மீண்டும் அழுக்கடை வாசலுக்கு மக்களை அழைத்துச் செல்கினற ஏற்பாடாகவே எம்மால் கருதமுடியும். வேட்பாளர் ஒருவர் ஒரு வாக்கினால் வெற்றி பெற்றால் ஜனனாயகத்தில் வெற்றி என்பது போல் ஒரு வாக்கினால் ஜனனாயக எதிரி தோல்வியடைவதும் மக்களுக்கு வெற்றிதான்.
தேசியப்பட்டியல் முறமையில் உறுப்பினர்களை நியமிக்கின்ற முறை இலங்கையில் உருவானது பாராளுமன்றத்தினுள் பகுத்தறிவுள்ளவர்களை உள்வாங்குவதற்காகவே சில கொள்ளையர்கள் தேர்தலில் வென்றாலும் உறுப்பினர் தோற்றாலும் உறுப்பினர் என்று மக்களின் ஜனனாயக உரிமையினை குழிதோண்டி புதைக்கின்றனர்.இதற்கு ஆட்சியாளர்களும் துனைபோவது ஜனனாயகத்தை கேள்விக்குறியாக மாற்றும் செயலாகும்.
தேசியப்பட்டியல் நியமனம் றிசாட்பதியுத்தின் தலமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரசில் பிளவினை ஏற்படுத்தியிருப்பதை எம்மால் அவதாணிக்கமுடியும.; றிசாட்பதியுத்தின் தனக்கான அரசியல் முகவரியை முஸ்லிம் காங்கிரசிலிருந்து பெற்றுக்கொண்டவா.; அரசியல் சுகபோகங்களை நுகரவேண்டும் என்னும் தீராத ஆசையின் விளைவால் தாய்கட்சியிலிருந்து விலகி தனக்கு சொந்தமான தனிக்கட்சியை உருவாக்கினார். இவ்வேலை திட்டத்தை வெற்றியாக மாற்றுவதற்கு காரணமாயிருந்தவர் அதன் செயலாளர் வை.எல்.எஸ்.ஹமீட்டாகும். றிசாட்பதியுத்தினை கட்சியிலிருந்து செயலாளர் நீக்கியதாக ஒரு செய்தியும் பின்னர் றிசாட்பதியுத்தின் வை.எல்.எஸ்.ஹமீட்டை கட்சியிலிருந்து நீக்கியதாக இன்னொரு செய்தியும் காட்டுத் தீ போல் பரவியது கட்சிகள் உடையலாம் கழகங்கள் அரசியலில் உடைய முடியாது.
எப்போதும் விகிதாசர தேர்தல் முறைக்குள் ஒழிந்து பாராளுமன்ற உறுப்பினர் பதவிகள் ஒன்றிரண்டை பெறுகின்ற அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் முஸ்லிம் காங்கிரசினைப் போல் நிலையான வாக்கு வங்கியை வைத்திருக்கின்ற கட்சியாக கருதமுடியாது. வன்னியில் பிறந்த இக்கட்சி இம்முறை பாராளுமன்ற பொதுத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் தனித்துக் கேட்டு ஐக்கிய தேசியக் கட்சிக்கு கிடைப்பதற்கு சாத்தியமாக இருந்த ஒரு ஆசணத்தை இழப்பதற்கு காரணமாக மாறியது.
அம்பாறை மாவட்டத்தில் அகிலஇலங்கை மக்கள் காங்கிரசிக்கு விழுந்துள்ள சுமார் 30000 வாக்குகள் அந்தக்கட்சிக்குரிய வாக்காக கருதமுடியாது ஏனேனில் அம்பாறை மாவட்டத்தில் எப்போதும் முஸ்லிம்காங்கிரஸ் அல்லாத வாக்குகள் கொஞ்சம் இருப்பது வழக்கம் இந்தவாக்குகள் தான் இம்முறை தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரசுக்கு விழுந்திருக்கின்றது என்பதனை உறுதியாக சொல்லமுடியும் முஸ்லிம்காங்கிரசுக்கு இல்லாத அந்தவாக்குகள் அதாஉல்லா மற்றும் பேரியல் கடந்த காலங்களில் பாராளுமன்ற உறுப்பினராக வருவதற்கு காரணமாக இருந்தது. நடந்து முடிந்த பொதுத்தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தன்னையும் அளித்து அதாஉல்லாவையும் அளிப்பதற்கு முஸ்லிம்காங்கிரசிட்கு அல்லாத வாக்குகளை மாற்றியிருக்கின்றது உதிரிக்கட்சிகள் யாரும் அந்தவாக்கினை பயன்படுத்தமுடியும் இதனால் முஸ்லிம் காங்கிரசிற்கு எந்தப்பாதிப்பும் தேர்தலில் வருவதில்லை.
அம்பாறையில் ஐக்கிய தேசியகட்சி ஒரு உறுப்பினரை இழப்பதற்கு காரணியாக மாறிய அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஐக்கிய தேசியக் கட்சியிடம் தேசியப்பட்டியல் கேட்பதற்கான தகமையை இழந்து விட்டது.
மேற்படி சம்பவங்களை மீறி தேசிப்பட்டியல் கிடைக்கின்ற போது வை.எல்.எஸ்.ஹமீட்டிக்கு கொடுக்கவேண்டிய தார்மிகக் கடமை றிசாட்கிருக்கின்றது. இந்தத் தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சியின் ஆதரவாளர்களை ஐக்கிய தேசிய கட்சியில் வேட்பாளர்களாக நிறுத்துகின்ற பணியை றிசாட் செய்தாரே தவிர தன்னுடைய கட்சியின் வாக்கு வங்கியை அதிகரித்து அதற்கு வேட்பாளார் நிறுத்துகின்ற பணியை செய்யவில்லை. கிண்ணியா மஃறுப் ஐக்கிய தேசியக் கட்சிகுரியவர் புத்தளம் நவவி மற்றும் ஏனைய மாவட்டங்களிலும் வேட்பாளர்கள் இவ்வாறுதான் போடப்பட்டாhர்கள் ஆகவே தன்னுடைய கட்சியில் முதன்மையானவர்களுக்கு தேசியப்பட்டியல் கேட்டுப் பெறுகின்ற வல்லமை றிசாட்பதியுதினிடம் காணப்படவில்லை.
புத்தளம் மாவட்டத்தில் பலவருடங்கள் ஐக்கிய தேசியக்கட்சியில் தெரிவு செய்யப்பட்ட முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்திருக்கின்றனர் அனால் ஒரு தசாப்தகாலமாக பாராளுமன்ற உறுப்பினர்கள் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்படுவது தவற விடப்பட்டுள்ளது. இம்முறை பொதுத்தேர்தலில் புத்தளம் மாவட்டத்தை ஐக்கிய தேசியக்கட்சி வெல்வதற்கு அங்கு வாழ்கின்ற முஸ்லிம் மக்கள் பிரதான காரணியாக இருந்துள்ளனர் இதன் காரணத்தால் புத்தளம் மாவட்டத்திற்கு தேசியப்பட்டியலை கொடுக்க ரனில் விக்கிரம சிங்கஹ மிகவும் பிடியாக இருந்தார் தேர்தல் ஆனையாளர் பட்டியலில் இருப்பவர்கள் அல்லது தோல்வியடைந்தவர்கள் தான் தேசியப்பட்டியலில் கவனத்தில் கொள்ளப்படும் என்ற காரணத்தால் புத்தளம் நவவிக்கு அது வழங்கப்பட்டுள்ளது. மேலும் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை பங்கு போட்டுக்கொள்வது அரசியலில் ஆரோக்கியமான செயற்பாடாகாது மற்றும் நம்பிக்கையையும் தராது இதற்கு சிறந்த உதாரணமாக 1989ம் ஆண்டு ஹிஸ்புல்லா கல்குடாபிரதேசத்திற்கு இரண்டரை வருடங்களில் உறுப்பினர் பதவியை வழங்குவது என்று கூறி மறுத்ததை நினைவு கூறமுடியும மேலும் ஒரு உறுப்பினர் தொடர்ச்சியாக ஐந்து வருடங்கள் பாராளுமன்றஉறுப்பினராக பதவிவகித்தால் தான் தனக்கான ஓய்வூதியத்தை பெற்றுக்கொள்ளமுடியும்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்மூலம் தேசியப்பட்டியல் அம்பாரை மாவட்டத்திற்கு வரும் என்பதும் அதனை வரவேற்று காத்திருப்பதும் கடல்வற்றி கருவாடு தின்னுகின்ற செயலுக்கு ஒப்பானதாகும்.இதனை வைத்து அம்பாரையில் எதிர் அரசியலை செய்யலாம் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கனவு காண்பது நடைமுறைக்கு ஒவ்வாத விடயமாக மாறுவதுடன் றிசாட்பதியுத்தினிடம் சேர்ந்துள்ள அரசியல் கூட்டாளிகள் பிரிந்து செல்வதற்கை வழிவகுக்கும். மேலும் வை.எல்.எஸ்.ஹமீட் பிரிந்து ஏதாவது காங்கிரஸ் எனும் பெயரில் கட்சி செய்தால் பிச்சைவேண்டாம் நாயைப்பிடி என்பது போல் அகில இலங்கை மக்கள் காங்கிரசினரின் நிலை மாறிவிடும் என்பதை தற்போதய அனுமானமாகும்.
எஸ்.எம்.தல்ஹா
0 Comments