பொதுவாக வீடியோ கேம்கள் விளையாடுபவர்கள் உலகை மறந்து அதற்குள்ளேயே வாழ்ந்துகொண்டு இருப்பர். பசி, தூக்கம், உணவு என அனைத்தையும் மறந்து இதுபோல விளையாட்டுக்குள் அவர்கள் மூழ்கிப்போவதற்கான காரணத்தை அறிய விரும்பிய ஆராய்ச்சிக் குழு ஒன்று இதன் காரணத்தை தற்போது வெட்ட வெளிச்சமாக்கியிருக்கிறது.
இங்கிலாந்தின் பிளைமவுத் பல்கலைக்கழகம் மற்றும் ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தின் தொழில்நுட்ப பல்கலைக்கழகங்கள் இணைந்து ‘டெட்ரிஸ்’ வீடியோ விளையாட்டினை விளையாடுவதால் வரும் பாதிப்பைக் குறித்து ஒரு ஆய்வை மேற்கொண்டனர்.
பதினெட்டு முதல் இருபத்தேழு வயதுடையவர்களிடம், இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. அதில், ‘டெட்ரிஸ்’ வீடியோ விளையாட்டு மனதின் கற்பனைத் திறன் உருவாகும் பகுதியை ஆக்கிரமித்து இருப்பதாக தெரியவந்துள்ளது. இதனால், 56 முதல் 70 சதவிகிதம் மனதின் ஏக்கங்கள் கட்டுப்படுத்தப்படுவதாக தெரியவந்துள்ளது.
‘டெட்ரிஸ்’ விளையாட்டு தூக்கம், காபி, உணவு, போதை, உடலுறவுக்கான ஏக்கங்களைக் கூட கட்டுப்படுத்தலாம் என இதன்மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
பொதுவாக ஒரு குறிப்பிட்ட உணவை உட்கொண்ட அனுபவத்தையோ அல்லது ஒரு செயலை செய்தது பற்றி கற்பனையோ செய்வதுதான் ஏக்கத்துக்கு வழிவகுக்கிறது என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். ஆகையால், ஏக்கத்தைக் குறைக்க உடனடியாக ‘டெட்ரிஸ்’ விளையாட்டை டவுன்லோட் செய்யுங்கள்!


0 Comments