Subscribe Us

நடுரோட்டில் ராட்சத பள்ளம்: செல்பி எடுக்க குவிந்த சுற்றுலாப்பயணிகள்...



நாளுக்கு நாள் அதிகரித்து வரும் செல்பி மோகத்தை ஊடகங்களும் சமூக ஆர்வலர்களும் கடுமையாக விமர்சித்து வந்தாலும், செல்பி மோகம் மட்டும் அடங்குவதாக தெரியவில்லை.

இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் கடந்த வெள்ளிக்கிழமை திடீரென ராட்சத பள்ளம் ஒன்று உருவானது. இதற்கான காரணம் தெளிவாக தெரியாத நிலையில், இந்த தகவல் வெளியான சில மணி நேரத்திற்குள் அந்த பகுதியே விழாக்கோலம் பூண்டது. பல பொதுமக்கள் அந்த இடத்திற்கு வந்து செல்பி எடுத்துக் கொண்டனர். சமுக வலைதலங்களில் இவர்களின் செல்பியை பார்வையிடுபவர்களும், செல்பி வெறி பிடித்து அந்த இடத்திற்கு படையெடுத்து வருகின்றனர்.

இந்தக் கொடுமை ஒருபக்கம் என்றால் மறுபக்கத்தில் நெட்டிசன்கள், பிரபலங்கள் அந்த ராட்சத குழிக்குள் விழுவது போன்று மீம்ஸ்களை உருவாக்கி மிரட்டி வருகின்றனர். இவர்களின் தொல்லை எல்லை தாண்டிய நிலையில், ராட்சத பள்ளத்தை சரி செய்யும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இந்த வார இறுதிக்குள் அந்த பணிகள் முடிவடைந்து விடும் என்றும் மான்செஸ்டர் நகர செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.





Post a Comment

0 Comments