பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களின் தாயகமாக உள்ள உத்தரப்பிரதேச மாநிலத்தில், மாணவிகளை ராகிங் தொல்லைகளிலிருந்து காப்பாற்றுவதற்காக புதிய ஆப் ஒன்றை லக்னோ பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
'ரக்ஷக்' என்ற பெயரில், உருவாக்கப்பட்டுள்ள இந்த அப்ளிகேஷனை மாணவிகள் தங்கள் ஸ்மார்ட் போனில் டவுன்லோடு செய்து கொள்ள வேண்டும். ஒரு வேளை யாராவது ராகிங் செய்தால் அதில் உள்ள ப்ளீஸ் கால், வாய்ஸ் கால், எஸ்எம்எஸ், டைரக்ட் போன் கால் போன்ற 4 தேர்வுகளை உபயோகித்து தங்களை பொறுக்கிகளிடமிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்.
இதில் எதைத் தேர்வு செய்தாலும், அவர்கள் இருக்கும் இடம் சர்வர் மூலமாக கண்டறியப்பட்டு, உடனடியாக பாதுகாப்பு அதிகாரிகள் அந்த இடத்திற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று மூத்த பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


0 Comments