Subscribe Us

header ads

தலைமுடியை வெட்டுபவர்கள் கைது செய்யப்படுவர்: பொலிஸ் தலைமையகம்


கட்சி சின்னத்துடன் வேட்பாளரின் விருப்பு இலக்கத்தையும் சேர்த்து சிகையலங்காரம் செய்து கொள்வது தேர்தல் சட்டத்தின் பிரகாரம் குற்றமாகும் என்று பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

தலைமுடியை அவ்வாறு அலங்காரம் செய்து கொண்டிருப்பவர்கள் கைது செய்யப்படுவர் என்றும் பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பில் சகல பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாவும், அவ்வாறு சிகையலங்காரம் செய்து கொண்டு சுற்றித்திரிபவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

அந்த வகையில், ஜி.தரங்கய என்பவர், மாத்தறை, தெவிநுவர பகுதியில் பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரின் பெயர், எண், மற்றும் புள்ளடி அடையாளங்களை தனது சிகை அலங்காரம் மூலம் செய்து தேர்தல் பிரசாரத்தினை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments