வாழைச்சேனை பொலிஸ் பிரிவின் வாழைச்சேனை மக்கலடி வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்றுக்கு இனந்தெரியாதோரால் தீ வைத்த சம்பவம் ஒன்று புதன்கிழமை மாலை இடம் பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி திப்பட்டுமுன தெரிவித்தார்.
கண்டி பிரதேசத்தைச் சேர்ந்த கட்டுமான பணிகளில் ஈடுபடும் நிறுவனத்தைச் சேர்ந்த சலாஹ_தீன் முஹம்மது பஷீர் மற்றும் அவரது உதவியாளர்கள் தங்களது தொழில் நிமித்தம் வாழைச்சேனை மக்கலடி வீதியில் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர்.
முச்சக்கர வண்டியை வீட்டிற்கு முன்னாள் நிறுத்தி வைத்து விட்டு சென்ற வேளை அயலவர்களின் கூக்குரல் சத்தம் கேட்டு வந்து பார்த்த போது தனது முச்சக்கர வண்டி தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்ததையும், அதனை அயலவர்களின் உதவியுடன் அணைத்து விட்டதாகவும் சலாஹ_தீன் முஹம்மது பஷீர் வாழைச்சேனை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி திப்புட்டுமுன தெரிவித்தார்.

0 Comments