Subscribe Us

header ads

மாம்பழ பிர்னி



தேவையான பொருட்கள்: 

நன்கு கனிந்த புளிப்பில்லாத மாம்பழம் - 2
அரிசி - 2 டே.ஸ்பூன், 
கெட்டியான பால் - 3 கப், 
சர்க்கரை - சுவைக்கு
ஏலப்பொடி சிறிதளவு, 
சன்னமாக சீவிய பாதாம், பிஸ்தா, சாரைப்பருப்பு அலங்கரிக்க 

செய்முறை :

• மாம்பழங்களை தோல்சீவி சன்னமாக நறுக்கி வைக்கவும். 

• அரிசியை 30 நிமிடம் ஊறவைத்து மை போல் அரைத்து கொள்ளவும். 

• அடிகனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி நன்கு கொதிக்கவிடவும். 

• அதில் அரைத்து வைத்துள்ள அரிசி விழுதைச் சேர்த்து கட்டியில்லாமல் கலந்துவிடவும். விழுது நன்கு வெந்து பளப்பளப்பான நிறம் வந்ததும் தேன் சேர்த்து நன்கு கலந்து விடவும். 

• தேன் நன்றாக சேர்ந்து கொதிக்கத் தொடங்கியதும் இறக்கி சிறிது ஆறியதும், நறுக்கி வைத்துள்ள மாம்பழங்களை அலங்கரிக்கப்பதற்கு சிறிதளவு தனியாக வைத்துக்கொண்டு, மீதமுள்ளதை லேசாகப் பிசைந்து கூழ்போல் செய்து இறக்கி வைத்துள்ள பாலோடு கலந்து விட்டு 2 நிமிடம் மூடி வைக்கவும். 

• 2 நிமிடம் கழித்து நறுக்கிய மாம்பழம், பருப்புகளைத் தூவி அலங்கரிக்கவும். 

• குளிர்சாதனப் பெட்டியில் 1/2 மணி நேரம் வைத்திருந்து சில்லென்று பரிமாறவும். குளிர்ச்சி விரும்பாதவர்கள் அப்படியே அருந்தினாலும் நன்றாக இருக்கும்.


மேலும் சமையல் குறிப்புக்களை பெற : பாய் கடை சமையல் LIKE THIS PAGE

Post a Comment

0 Comments