அபு அலா –
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களையும் வரவேற்கும் நிகழ்வு நேற்று மாலை (29) அட்டாளைச்சேனையில் இடம்பெற்றது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அட்டாளைச்சேனை மத்திய குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வுக்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் மத்திய குழுவின் அமைப்பாளருமான ஏ.எல்.எம்.நஸிர் தலைமையில் இடம்பெற்றது.
அட்டாளைச்சேனை ஹபானா பூங்காவில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம்.ஹரீஸ், எம்.ஐ.எம்.மன்சூர் ஆகியோருடன் கல்முனை மாநகர சபையின் பிரதி மேயரும் கட்சியின் சிரேஷ்ட பிரதித் தலைவருமான முஸ்லிம் முழக்கம் ஏ.எல்.அப்துல் மஜீட், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர்களான எம்.எல்.கலீல், ஆப்தீன் தமீம், அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் கே.எல்.எம்.நக்பர், மு.காவின் உச்சபீட உறுப்பினர் யூ.எம்.வாஹிட் ஆசிரியர் மற்றும் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வின்போது, வெற்றிபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம்.ஹரீஸ், எம்.ஐ.எம்.மன்சூர், கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் மத்திய குழுவின் அமைப்பாளருமான ஏ.எல்.எம்.நஸிர், கல்முனை மாநகர சபையின் பிரதி மேயரும் கட்சியின் சிரேஷ்ட பிரதித் தலைவருமான முஸ்லிம் முழக்கம் ஏ.எல்.அப்துல் மஜீட், மு.காவின் உச்சபீட உறுப்பினர் யூ.எம்.வாஹிட் ஆசிரியர் ஆகியோர் கட்சிக்கு வாக்களித்த கட்சிப் போராளிகள் உள்ளிட்ட அட்டாளைச்சேனை பிரதேச மக்களுக்கு நன்றியினையும் தெரிவித்தனர்.
0 Comments