ஜெத்தா : சவுதி அரேபியாவின் ஜெத்தா மாநகர நிர்வாகம் "உண்ணும் உணவுகள் வீணாக்கப்படுவதை தடுக்க பல்வேறு வழிமுறைகளை முன்னெடுக்க உள்ளதாக" தெரிவித்துள்ளது.
இது குறித்து ஜெத்தா மாநகராட்சி செய்தி தொடர்பாளர் முஹம்மது அல் புகமி கூறுகையில், சவூதி அரேபியாவில் நாளொன்றுக்கு சுமார் 13 மில்லியன் டன் உணவு வீணடிக்கப்படுவதாகவும், இவ்வாறு வீணாகும் உண்ணத்தக்க உணவுகளை பசித்த வயிறுகளுக்குத் திருப்புவதன் மூலமாக உணவின் விலையில் 15 சதவிகிதம் குறைய வாய்ப்புள்ளதாகவும் நிபுணர்கள் குழு ஒன்று தெரிவித்துள்ளது.
இதனைக் கருத்தில் கொண்டு ஜெத்தா மாநகராட்சி நிர்வாகம், "உணவு பொருட்கள் வீணாக்கப்படுவதை தடுக்க பல்வேறு வழிமுறைகளை முன்னெடுக்க உள்ளதாக கூறினார். இது குறித்து நகரிலுள்ள உணவகங்கள், திருமண மண்டபங்கள், விண்மீன் விடுதிகள், உணவுத் தொழிலகங்கள் போன்றவற்றிற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், விதிகளை மீறுவோர் கடுமையாக தண்டிக்கப்படுவர்" என்றும் கூறினார்.
நல்லுணவை மீதப்படுத்தி குப்பையில் கொட்டிவிட்டு குப்பை உணவுகள் எனப்படும் ஜங்க்ஃபுட் வகைகளை உண்டு தொப்பையைப் பெருக்கும் இக்காலத்திற்கு இது நற்செய்தியாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


0 Comments