Subscribe Us

header ads

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிய அனுசுயா ஸ்ரீ இஸ்லாமிய பெண்மணி!!


சில நாட்களுக்கு முன்பு என் முக நூல் பக்கத்தில் வெளியான அனுசுயா ஸ்ரீயின் வீடியோ அரங்கத்தில் உள்ளவர்களையும், அதை பார்த்த நம்மையும் கலங்க வைத்திருக்கும்.

அந்த வீடியோவை பார்த்த அனுசுயா ஸ்ரீ இன்று என்னோடு தொலைபேசியில் தொடர்பு கொண்டு சில முக்கிய தகவல்களை தந்தார். அதை கேட்ட எனக்கு அதிர்ச்சியும் ஆச்சரியத்தையும் தந்தது.

நான் இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்ட ஒரு இஸ்லாமிய பெண் என்றும், எனது பெயர் அஸ்மத் ஆமினா என்றும், அன்று நான் தொலைக்காட்சியில் பேசும் போது கூட நோன்பு வைத்திருந்தாகவும், கட்டாயத்தின் பேரில் அந்த நிகழ்ச்சியில் பொட்டு வைக்க நேர்ந்தது என்றும் கூறினார்.

அந்த வீடியோவை பார்த்த பலர் அவரிடம் நீங்கல் இஸ்லாமிய பெண் அல்லவா…எப்படி நீங்கள் பொட்டு வைக்கலாம் என்று கேட்டதால் அவர் அதிர்ச்சி அடைந்து என் தொலைபேசி எண்ணை கண்டுபிடித்து என்னிடம் தொடர்பு கொண்டு அந்த வீடியோவை நீக்கும்படி கேட்டுக்கொண்டார்.

அவரின் விருப்படி அந்த வீடியோவை நீக்கி விட்டேன். இன்று அவர் இஸ்லாத்தின் வழிமுறைபடி நடந்து வருவதாகவும், தனியார் தொலைக்காட்சிகளில் பங்கெடுத்து வருவதாக என்னிடம் சொன்னார். விரைவில் இஸ்லாத்தை பற்றி அவர் பேசிய வீடியோவும் அனுப்பவதாக சொன்னார்.

வல்ல அல்லாஹ் அவருக்கு நோயில்லா நல் வாழ்வையும், நீடித்த ஆயுளையும், தந்தருள்வானாக. ஆமின்.

இதை கானும் நேயர்களும் அவருக்காக துவாச் செய்யவும். மேலும் அவரின் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு ஆதரவு தர வேண்டும் என்று அவர் அன்போடும் நம்மை கேட்டுக்கொண்டார்.


 

Post a Comment

0 Comments