Subscribe Us

header ads

முகா தேசியப்பட்டியல் வெளியானது! ஹரீஸ், மௌலானா, அன்வருக்கு அமைச்சு!!?


பொதுத் தேர்தல் 2015 முகாவுக்கு கிடைக்கப்பெற்ற 02 தேசியப்பட்டியல்களுக்கான உண்மையான நபர்கள் யார் என்பது தற்போது கட்சி வட்டாரங்களிலிருந்து மெல்லக் கசிந்துள்ளது.

இதன் படி தற்போது தேசியப்பட்டியலுக்காக நியமிக்கப்பட்டிருக்கும் இருவரும் அடுத்து வரும் தினங்களில் இராஜிநாமா செய்யவுள்ளதுடன் மேற்சொன்ன உண்மையான நபர்கள் அவர்களுக்கு பதிலாக நியமனம் செய்யப்படவுள்ளனர்.

முகா தலைவர் ரவூப் ஹக்கீம் தேர்தலின் போது வழங்கிய வாக்குறுதிக்கு அமைய அட்டாளைச் சேனைக்கு முழுமையாக ஒரு தேசியப்பட்டியல் வழங்கப்படவுள்ளது.

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் நஸீர் அல்லது முகா ஸ்தாபக பொதுச் செயலாளர் சட்டத்தரணி கபூர் ஆகியோர்களில் ஒருவருக்கு குறித்த தேசியப்பட்டியல் நியமனம் வழங்கப்படவுள்ளது.

02வது தேசியப்பட்டியல் தலா இரண்டரை வருடங்கள் என்ற ரீதியில் மட்க்களப்பு மற்றும் வன்னி மாவட்டங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளது.

அதற்கமைய மட்டக்களப்பு மாவட்டத்தில் ஓட்டமாவடியைச் சேர்ந்த ஒருவருக்கும் வன்னி மாவட்டத்தில் முகா சார்பில் போட்டியிட்டு கூடுதல் விருப்பு வாக்குகள் பெற்றவருக்கும் மேற்சொன்ன இரண்டாவது தேசியப்பட்டியலை வழங்க கட்சித் தலைவர் தீர்மானித்துள்ளதாக நம்பகரமாக தெரியவருகின்றது.

இது இவ்வாறிருக்க முகா சார்பில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மன்ஸூர் வகித்த கிழக்கு சுதாதார அமைச்சு திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த முகா மாகாண சபை உறுப்பினரான அன்வருக்கு வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

பெரும் எதிர்பார்ப்பை தோற்றுவித்துள்ள முகா வின் தேசியப்பட்டியல் யாருக்கு என்ற பரபரப்பு மேற்சொன்ன தீர்மானத்திற்கு அமைய விரைவில் முடிவுக்கு கொண்டுவரப்படவுள்ளதாக கட்சித் தகவல்களிலிருந்து தெரியவருகின்றது.

இதே வேளை இது காலவரை முகா வின் தேசியப்பட்டியல் எம்பியாக நியமனம் பெற்று வந்த கட்சியின் செயலாளர் எம்.ரி.ஹஸன் அலி மற்றும் முகா தவிசாளர் பஷீர் சேகுதாவுத் ஆகியோருக்கு தேசியப்பட்டியல் வழங்குவதில்லை என்றும் கட்சித் தலைமை உறுதியாக தீர்மானம் எடுத்துள்ளது.

இதன்படி கட்சியின் செயலாளர் நாயகம் ஹஸனலியை கௌரவிக்கும் வகையில் கிழக்கு மாகாண ஆளுநர் பதவியை பெற்றுக்கொள்வதற்கு முகா தலைவர் பெரும் ஆர்வம் காட்டுவதாக தெரிவிக்கப்படும் மறுபக்கம் முன்னாள் அமைச்சரும் தேசிய காங்கிரஸின் தலைவருமான ஏ.எல்.எம்.அதாவுல்லாவை கிழக்கு மாகாண ஆளுநராக நியமிக்கும் முஸ்தீபுகளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வட்டாரங்களில் முன்னெடுக்கப்படுவதாகவும் தெரியவருகின்றது.

இது ஒரு புறமிருக்கு முகா வுக்கு மத்திய அரசில் கெபினட் அமைச்சொன்றும் 02 பிரதியமைச்சுக்களும் வழங்கப்படவுள்ளன. குறித்;த 02 பிரதியமைச்சுக்களும் அம்பாறை மாவட்டத்தில் வெற்றி பெற்ற எச்.எம்.எம் ஹரீஸூக்கும் மட்டக்களப்பு மாவட்டத்தில் வெற்றி பெற்ற அலிசாகி மௌலானாவுக்கும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

முகா மத்திய அரசில் 03 பிரதியமைச்சுக்களை அல்லது ஒரு பிரதியமைச்சுடன் மற்றுமொரு இராஜாங்க அமைச்சை கோரியுள்ளதாக தெரியவருகின்றது.

இது சாத்தியமாகும் பட்சத்தில் ஹரீஸூக்கு இராஜாங்க அமைச்சை வழங்க முகா தலைவர் முன்வருவார் என கட்சித் தகவல்களிலிருந்து அறிய முடிகின்றது.

Post a Comment

0 Comments