1984ம் ஆண்டிற்குப் பின்னர் முதற்தடவையாக இம்முறை பாராளுமன்றில் கணவன்-மனைவி ஜோடியொன்று இடம்பிடிக்கவுள்ளது.
குண்டசாலை மற்றும் ஹரிஸ்பத்துவ தொகுதிகள் மூலம் ஆர்.பி. விஜேசிரி மற்றும் அவரது பாரியார் அப்போது பாராளுமன்றில் இடம்பிடித்திருந்த நிலையில் இம்முறை அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்ட தயா கமகேயும் ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியலில் ஆச்சரியமான முறையில் இடம் பிடித்துள்ள அவரது பாரியார் அனோமா கமகேயும் பாராளுமன்றம் செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
-Sonakr-
0 Comments