Subscribe Us

header ads

சத்தான சுவையான ஓட்ஸ் ஆலு சப்பாத்தி



தேவையான பொருட்கள்:   

ஓட்ஸ் - ஒரு கப், 
கோதுமை மாவு - அரை கப், 
மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், 
பச்சை மிளகாய் - 2, 
உருளைக்கிழங்கு - 2, 
கொத்தமல்லி - சிறிதளவு, 
வெங்காயம் - 2, 
நெய், உப்பு - தேவையான அளவு.   

செய்முறை: 

• கொத்தமல்லி, வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். 

• உருளைக்கிழங்கை நன்றாக வேகவைத்து நன்றாக மசித்து கொள்ளவும்.   

• ஓட்ஸை மிக்ஸியில் போட்டு மாவாக்கிக் கொள்ளவும்.   

• ஒரு பாத்திரத்தில் ஓட்ஸை போட்டு இதனுடன் மற்ற எல்லாப் பொருட்களையும் சேர்த்துப் சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து, 30 நிமிடம் ஊற விடவும். 

• பின் தோசைக்கலை அடுப்பில் வைத்து மாவை சப்பாத்திகளாக உருட்டி தவாவில் போட்டு சுட்டு எடுக்கவும்.   

• தொட்டுக்கொள்ள எதுவும் தேவையில்லாத ருசியான சப்பாத்தி இது!  

மேலும் சமையல் குறிப்புக்களை பெற : பாய் கடை சமையல் LIKE THIS PAGE

Post a Comment

0 Comments