Subscribe Us

header ads

நல்ல அரசியல் கலாச்சாரம் பிடிக்காத சிலர் பீதியை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர்!– கபீர் ஹாசிம்


நல்ல அரசியல் கலாச்சாரம் உருவாவது பிடிக்காத சிலர் பீதியை ஏற்படுத்த முயற்சிப்பதாக அமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட வேட்பாளருமான கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதிலும் பீதியை ஏற்படுத்தி அதன் ஊடாக தேர்தலில் வெற்றயீட்ட முயற்சிக்கின்றனர்.

புளுமெண்டல் வீதியில் நேற்று இடம்பெற்ற சம்பவம் இதற்கான ஓர் உதாரணமாகும்.

ரவி கருணாநாயக்கவின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திற்கு அமைதியான முறையில் சென்ற மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியது.

நல்லொழுக்கமான கலாச்சாரமொன்றை உருவாக்க எடுக்கும் முயற்சிகள் இவ்வாறான வன்முறைகளின் மூலம் தடுத்து நிறுத்தப்பட மாட்டாது.

ஜனவரி மாதம் 8ம் திகதி ஏற்படுத்தப்பட்ட மாற்றத்திற்கு அமைய மிகவும் அமைதியான முறையில் தேர்தல் பணிகளை முன்னெடுக்க இதுவைரயில் தேர்தல் ஆணையாளருக்கு சந்தர்ப்பம் ஏற்பட்டிருந்தது.

இவ்வாறான கோழைத்தனமான தாக்குதல்களின் மூலம் எமது நல்லாட்சி அரசாங்கத்தின் வெற்றியை திசை திருப்பி விட முடியாது.

சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை கட்சியின் சார்பில் தெரிவித்துக் கொள்கின்றோம் என கபீர் ஹாசிம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments