போர் முடிவுக்குக் கொண்டு வரப்படாமல் இருந்திருந்தால் அரசியல்வாதிகள் இவ்வளவு ஆடியிருக்க மாட்டார்கள் என அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
மஹர பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நான் இதைச் சொன்னால் ஊடகங்களின் தாக்குதலுக்கு இலக்காக நேரிடும்.
எனினும், இதைச் சொல்லாமல் இருக்க முடியாது, அதனால் சொல்கின்றேன்.
சில வேளைகளில் போர் முடிவுக்கு கொண்டு வரப்படலாம் இருந்திருந்தால் அரசியல்வாதிகள் இவ்வளவு ஆடியிருக்க மாட்டார்கள்.
அது வேறு ஒன்றுக்காகவும் அல்ல.
போர் வெற்றியை நாட்டு மக்களைப் போன்றே அரசியல்வாதிகளும் அனுபவிக்கின்றார்கள்.
சுதந்திரமாக எந்தவொரு இடத்திற்கும் செல்ல அனுமதியிருந்தது.களவு எடுக்க அஞ்சவில்லை.
எந்தவொரு குற்றச் செயலில் ஈடுபட்டாலும் கடந்த அரசாங்கத்தின் அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களை பாதுகாக்க தலைவர் ஒருவர் இருந்தார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.


0 Comments