Subscribe Us

header ads

புதிய பாராளுமன்றம் செப். முதலாம் திகதியே கூடும்! அதன் பின்னரே பிரதமர் பதவி பிரமாணம்!


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றைக் கலைத்தமை தொடர்பில் வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய, எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதலாம் திகதியே மறுபடியும் பாராளுமன்றம் கூடவேண்டியுள்ளது.

இந்நிலையில், நடந்து முடிந்த பொதுத் தேர்தலூடாக புதிதாக தெரிவாகும் உறுப்பினர்கள் எதிர்வரும் செப்டம்பர் முதலாம் திகதியே சத்தியப் பிரமாணம் செய்ய வேண்டியுமுள்ளது.

ஆக, அரசியல் யாப்பின் பிரகாரம், நாட்டின் பிரதமரும் முதலில் ஒரு பாராளுமன்ற உறுப்பினராகவே சத்தியப் பிரமாணம் செய்துகொள்ள வேண்டிய கட்டாயத்தின் அடிப்படையில், புதிய பிரதமரும் எதிர்வரும் செப்டம்பர் முதலாம் திகதி அல்லது அதற்கு பிந்திய தினமொன்றிலேயே சத்தியப் பிரமாணம் செய்து கொள்ளும் வாய்ப்புள்ளதாக சட்ட அறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.

Post a Comment

0 Comments