நண்பர்களே, சாமானிய மக்கள்
மத்தியில் அரசியல் வாதிகள் போன்றோர்கள் அதிசயப் பிறவிகள் போலவும் மிக உயர்ந்த மனிதர்கள் போலவும் ஒரு எண்ணம்
நிலவுகிறது. அந்த எண்ணம் முற்றிலும் தவறானது.
உதாரணமாக நமது தேர்தல் தொகுதி மாவட்ட பாராளுமன்ற
உருப்பினரை எடுத்துக்கொள்வோம்.
அவரது வேலை என்ன? அந்த தொகுதி
மக்களுக்குத் தேவையானவற்றை நிறைவேற்றித் தருவதே.
சாலையிடுவதிலிருந்து
சாக்கடை அள்ளுவது வரை அனைத்தும் அவர் பொறுப்பே. அதாவது நமக்காக வேலை பார்க்கும் ஒரு சாதாரண வேலையாள்.
இரு விசயங்களைக் கருத்தில் கொள்வோம்...
1. உங்கள் வீட்டு
வேலைக்காரரை எடுத்துக் கொள்ளுங்கள். அவரிடம் ரூ.20 கொடுத்து அரைக் கிலோ தக்காளி வாங்கிவரச் சொல்கிறீர்கள். அவரும் நீங்கள்
கொடுத்த பணத்தைக் கொண்டு தக்காளி வாங்கிவந்து தங்களிடம் தருகிறார்.
2. அடுத்து உங்கள் தொகுதி
பாராளுமன்ற உருப்பினடம் ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து உங்களது தெருவுக்கு தார்சாலை இட சொல்கிறீர்கள். அவரும் அதை வாங்கிக்கொண்டு
அப்பணியை செய்கிறார்.
இரு விசயங்களுக்கு என்ன வித்தியாசம்?
பணத்தின் அளவு மட்டுமே வேறுபடுகிறது. ஆனால், அவர்களுக்கான
பணியும் செயல்பாடும்ஒன்றுதான். அப்படியிருக்கையில் நமது வீட்டு
வேலைக்காரனுக்கும் நமது தொகுதி பாராளுமன்ற உருப்பினக்கும் என்ன வித்தியாசம் உள்ளது? வேலைக்காரரிடம்
கொடுப்பதும் உங்களது பணம்தான், பாராளுமன்ற
உருப்பினரிடம் கொடுப்பதும் உங்கள் பணம்தான். அதாவது ஆதிமுதல் அந்தம்வரை பல்வேறு பெயர்களில் நீங்கள் கட்டிய வரிப்பணமே.
சரி... நமது வீட்டில் வீட்டு வேலை புரியும் ஆளை எப்படி
நாம் தீர்மானிப்போம்? சும்மா ரோட்டில்போகும் எவனோ ஒருவனை நம்பி நமது வீட்டில் வேலைக்காரராக
சேர்த்து அவரிடம் நம்பி பணத்தைக் கொடுத்து பொருட்களை வாங்கிவரச் சொல்வீர்களா? அவனை
நம்பி வீட்டு வேலைகளை ஒப்படைப்பீர்களா?மாட்டோம்,
அவன் எந்த ஊர், எந்த தெரு, யார்
மகன், என்பது
முதற்கொண்டு தெரிந்துகொண்டு தான் அவரை வேலைக்கு அமர்த்துகிறோம், வீட்டு வேலைக்கே...
அனால் நமது ஊர் வேலைகளுக்கு???
ரூ.20 கொடுத்து
வேலைபார்க்கும் வேளையாளையே எவ்வளவு கவனமாக தேர்வு செய்யும் நாம் பல லட்சம்/கோடி ரூபாய் கொடுத்து வேலைவாங்கப்போகும்
ஒருவரைத் தேர்ந்தெடுப்பதில் கோட்டை விடுகிறோம். அவர் யார்? இதுவரை அவர் செய்த பணி
என்ன? இதுவரை
அவர் இப்பகுதிக்கு ஏதேனும் நல்லது செய்துள்ளாரா? நமது
நம்பிக்கைக்குத் தகுதியானவரா என்று எதையும் சிந்திப்பதில்லை. எடுத்த எடுப்பிலே எவரோ
ஒருவரையோ, நமது
தந்தை சொல்லும் நபரையோ, அல்லது பணம் கொடுக்கும்
ஆளையோ தேர்ந்தேடுத்துவிடுகிறோம்.
இந்த நிலை மாற வேண்டாமா?நம்மில் பல
இளைஞர்களுக்கு நமது சட்டமன்ற தொகுதி எது? நாடாளுமன்ற தொகுதி எது? நமது பாரளுமன்ற உருப்பினர் யார்.? மாகாண
சபை உருப்பினர் யார்.? மாநகர சபை உருப்பினர்.யார்.? அவர் இதுவரை நமக்கு
செய்தவை என்ன? இவற்றில்
எந்தக் கேள்விக்கும் பதில் தெரியாது.
1991இல் வெளிவந்த ஒரு
திரைப்படத்தின் பெயரைக் குறிப்பிட்டு அதன் இயக்குனர் யார்? என்று கேட்டால் கேள்வி கேட்டு முடிப்பதற்குள் பதில்
வந்துவிடும். இது எவ்வளவு கேவலமான நிலை? இதற்கு நாம் வெட்கித் தலைகுனிய வேண்டாமா? இனியாவது சிந்திப்போமா? வாக்குரிமை என்ன
அவ்வளவு எளியதா காசுக்கும் சாப்பாடுக்கும் விற்க? நம் நாட்டில்
கிடைக்கும் ஜனநாயக உரிமைகளில் மிகப் பெரிய உரிமைதான் வாக்குரிமை அந்த ஜனநாயகத்தின்
அடிப்படை உரிமையே வாக்குரிமை அடகு வைக்கலாமா? விற்கலாமா?
இதுவரை சென்றது போதும். மாற்றுவோம்... நம்மால் மாற்ற
முடியாவிட்டால் மாற்றுபவர்களுக்கு உதவுவிடுவோம்... உதவவும் முடியாவிட்டால், அவர்களுக்கு
வழிவிடுவோம்....
samzul
a rasheed
0 Comments