Subscribe Us

header ads

முதற் தடவையாக தபால் மூல வாக்களிப்பு தள ஆயுர்வேத வைத்தியசாலையின் இன்று இடம்பெற்றது.

அபு அலா -


தபால் மூல வாக்களிப்பு முதற்தடவையாக அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையில் இன்று வியாழக்கிழமைக்கிழமை காலை (06) வாக்களிப்பு இடம்பெற்றது.

வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் கே.எல்.எம்.நக்பர் தலைமையில் இடம்பெற்ற இந்த தபால் மூல வாக்களிப்பின்போது நிலைய கடமை உத்தியோகத்தர்களாக எஸ்.முனவ்வர், எஸ்.எம்.றிஜால்டீன் ஆகியோர் இக்கடமையில் ஈடுபட்டிருந்தனர்.

காலை 10.15 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட இந்த தபால் மூல வாக்களிப்பு மதியம் 12.00 மணிவரை இடம்பெற்றதும், குறித்த தள வைத்தியசாலைக்கு தபால் மூல வாக்களிப்பு இடம்பெற்றது என்பது இது வரலாற்றில் முதற்தடவையாக இடம்பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

இதற்கு காரணகருத்தாக அமைந்த வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் கே.எல்.எம்.நக்பருக்கு அங்கு கடமை புரியும் வைத்தியர்கள், உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் ஆகியோர் தங்களின் நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.








Post a Comment

0 Comments