Subscribe Us

header ads

ஓமந்தை சோதனைச் சாவடி இன்று முதல் நீக்கம்


வவுனியா, ஓமந்தை இராணுவ சோதனைச் சாவடி இன்று முதல் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
2009 ஆம் ஆண்டு மே மாதம் யுத்தம் முடிவடைவதற்கு பல வருடங்களுக்கு முன்னர் இந்த சோதனைச் சாவடி ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
யுத்தம் உச்ச கட்டத்தில் இருந்த காலத்தில் இராணுவ முகாமுக்கு முன்னால் புலிகளின் முகாமொன்றும் அமைக்கப்பட்டிருந்தது. வடக்குக்குச் சென்று வரும் வாகனங்கள் இந்த சோதனைச் சாவடியிலேயே கடுமையாக சோதனையிடப்பட்டது.
இந்த சோதனைச் சாவடியில் சாதாரண மக்கள் எவரும் சோதனைக்கு உட்படுத்தப்படுவதில்லையெனவும், இராணுவ பொலிஸார் மாத்திரமே கடமையில் உள்ளதாகவும் இராணுவப் பிரிவு அறிவித்தள்ளது.

Post a Comment

0 Comments