Subscribe Us

header ads

மஹிந்த ஜபக்ச அரசங்கம் , சர்வதேச ரீதியில் நன்மதிப்பை மேம்படுத்த 6.5 மில்லியன் டொலர் செலவிட்டுள்ளது


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அரசாங்கம், சர்லுவதேச ரீதியில் நன்மதிப்பை மேம்படுத்திக்கொள்ள 6.5 மில்லியன் அமெரிக்க டொலர் செலவிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

2014ம் ஆண்டின் ஐந்து மாதக் காலப்பகுதியில் இவ்வாறு பணம் செலவிடப்பட்டுள்ளது.

நேரடியாகவும் மறைமுகமாகவும் இவ்வாறு பணம் செலவிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவை மையமாகக் கொண்டு இயங்கி வரும் டபிள்யூ.ஆர். நிறுவனம் மற்றும் இமாட் சுபாரி ஆகிய நிறுவனங்களுக்கு கொடுப்பனவு செலுத்தப்பட்டுள்ளது.

இமாட் சுபாரி நிறுவனத்தின் உரிமையாளர் ஒபாமா, ஹிலரி கிளின்ரன் போன்றோருக்கான தேர்தல் பிரச்சாரத்திற்காக பணம் செலவிட்டவர்களில் முக்கியமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments