Subscribe Us

சுரைக்காய் பால் கூட்டு


தேவையான பொருள்கள் :

சுரைக்காய் - 150 கிராம்  
மஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி  
உப்பு - தேவையான அளவு 
கொத்தமல்லி தழை - சிறிதளவு 

தாளிக்க :

எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி  
கடுகு - 1/2 தேக்கரண்டி  
உளுந்தம்பருப்பு - 1/2 தேக்கரண்டி  
பெரிய வெங்காயம் - 1  
பச்சை மிளகாய் - 2  
கறிவேப்பிலை - சிறிது 
சீரகம் - அரை ஸ்பூன் 
தேங்காய் பால் - 1 கப் 

செய்முறை :

• சுரைக்காய், கொத்தமல்லி தழை, வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைக்கவும். 

• பச்சை மிளகாயை இரண்டாக கீறி வைக்கவும். 

•  அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம்பருப்பு, சீரகம் போடவும். கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். 

• வெங்காயம் பொன்னிறமானதும் நறுக்கி வைத்துள்ள சுரைக்காயுடன் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து ஒரு நிமிடம் கிளறி தேங்காய் பாலை ஊற்றி அடுப்பை மிதமான சூட்டில் வைத்து வேக விடவும். 

• சுரைக்காய் நன்கு வெந்து பால் வற்றி வரும் போது அடுப்பை அணைக்கவும். 

• சுரைக்காய் பால் கூட்டு ரெடி.



மேலும் சமையல் குறிப்புக்களை பெற : பாய் கடை சமையல் LIKE THIS PAGE

Post a Comment

0 Comments