Subscribe Us

நமக்கு பிடித்த கார்ட்டூன் கதாபாத்திரம் நேரில் வந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்?..



கார்ட்டூன் நெட்வர்க்கில் வந்துகொண்டிருந்த பிரபல 'பாப்பாய்' நாடகத்தில், தனது காதலி ஆலீவ்-ஐ காக்க 'ஸ்பினாச்' உண்டு சட்டென கைகளை பாப்பாய் வளர்ப்பதுபோல, அமெரிக்காவில் வசித்துவரும் ஒருவருக்கு இயற்கையிலேயே கைகள் அமைந்துள்ளன. இவரது முன்னங்கை 49 செ.மீட்டர் சுற்றளவுடன் உள்ளது. இதனால் தனது ஒரே கையில் ஒரு கூடைப்பந்தை இவரால் அழுத்தமாக பிடிக்க முடியும்.

அமெரிக்காவின் மினெசோட்டா மாநிலத்தில் மனைவியுடன் வாழ்ந்துவரும் ஜெஃப் டெப்ஸ்(52) தனது பள்ளிப் பருவத்திலிருந்தே பெரிதாக வளர்ந்த முன்னங்கைகளால், கை மல்யுத்ததில்(arm wrestling) பங்கேற்று வருகிறார். முதலில் தனது கைகளின் வளர்ச்சியைக் கண்டு தனக்கு ஏதேனும் வித்தியாசமான நோய் இருக்குமோ..? என பயந்துபோன ஜெஃப்புக்கு ஒரு பிரச்சனையும் இல்லை என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

எனினும், 1986-ஆம் ஆண்டு அவரது கைகளில் அடிபட்டதால் கடந்த 2012-ஆம் ஆண்டு வரை கை மல்யுத்தத்திலிருந்து விலகியே இருந்தார். தற்போது, மீண்டும் போட்டிகளில் களமிறங்கியிருக்கும் அவர் அமெரிக்காவின் பல முக்கிய வீரர்களுடன் போட்டிப்போடுவதை மகிழ்ச்சியாக கருதுகிறார்.

இந்த நிஜ உலக 'பாப்பாய்'-ஐ முதன்முறையாக நேரில் சந்திப்பவர்கள் நிச்சயம் இவர் கைகளைக் கண்டு முதலில் பயந்து விடுகின்றனராம்.

Post a Comment

0 Comments