Subscribe Us

கொத்தவரங்காய் பருப்பு உசிலி



தேவையான பொருட்கள் : 

கொத்தவரங்காய் - கால்கிலோ, 
து.பருப்பு - 100 கிராம், 
காய்ந்த மிளகாய் - இரண்டு, 
பூண்டு - இரண்டு பல், 
இஞ்சி - சிறிய துண்டு 
கடுகு, உ,பருப்பு - தலா கால் டீஸ்பூன், 
பெருங்காயம் - ஒரு சிட்டிகை, 
சமையல் சோடா - ஒரு சிட்டிகை, 
உப்பு - தேவையான அளவு, 
எண்ணெய் - தாளிக்க. 

செய்முறை :

• கொத்தவரங்காயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். 

• து.பருப்பை கால் மணி நேரம் ஊறவைக்கவும். பின், இத்துடன், மிளகாய், பூண்டு, இஞ்சி, பெருங்காயம், உப்பு சேர்த்து மிக்சியில் கொரகொரப்பாக அரைக்கவும். இதை இட்லி தட்டில் வேகவைத்து எடுத்து உதிர்த்துக் கொள்ளவும். 

• வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு உ.பருப்பு, தாளித்து கொத்தவரங்காயை சேர்த்து சமையல் சோடா போட்டு நன்கு வதக்கவும். 

• பின் அடுப்பை மிதமான தீயில் வைத்து இரண்டு டீஸ்பூன் தண்ணீர் தெளித்து, உப்பு போட்டு மூடிவைத்து விடவும். ஐந்து நிமிடம் கழித்து திறந்து வேகவைத்து உதிர்த்த து.பருப்பையும் கொட்டிக் கிளறி இறக்கவும். 

குறிப்பு; கொத்தவரங்காயை இந்த கலவையில் சாப்பிட்டால் வாயு சேராது. சீக்கிரம் செரித்துவிடும். சமையல் சோடா சேர்த்திருப்பதால் கொத்தவரங்காய் நிறம் மாறாது.



மேலும் சமையல் குறிப்புக்களை பெற : பாய் கடை சமையல் LIKE THIS PAGE

Post a Comment

0 Comments