ஸ்மார்ட்போன்கள் மலிவாக நல்ல தரமுள்ள கேமரா வசதியுடன் கிடைப்பதே ‘செல்பி’ மோகம் அதிகரிக்க காரணமாகிறது என இங்கிலாந்தில் நடத்தப்பட்ட ஆய்வின்மூலம் தெரியவந்துள்ளது. இந்த ஆய்வில் இங்கிலாந்தில் வசிக்கும் 31 சதவிகிதம் மக்கள் வாரத்துக்கு ஒருமுறையாவது தங்களது செல்போன் மூலம் தங்களை ‘செல்பி’ எடுத்துக் கொள்வதாக கூறியுள்ளனர்.
இந்தக் கணக்குப்படி பார்த்தால், கடந்த ஆண்டில் மட்டும், சுமார் 120 கோடி செல்பி புகைப்படங்களை இங்கிலாந்து வாசிகள் எடுத்திருக்க வேண்டும் என ஆய்வை நடத்திய ஆஃப்காம் நிறுவன இயக்குனர் ஜேன் ரம்பிள் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் புகழ்பெற்ற ஆஸ்கர் விருதின்போது ஹாலிவுட் நடிகர்கள் பிராட் பிட், பிராட்லி கூப்பர், ஜூலியா ராபர்ட்ஸ், கெவின் ஸ்பேசி என பட்டாளமாக சேர்ந்து எடுத்துக் கொண்ட ’செல்பி’ புகைப்படமே அதிகமாக ரீடுவிட் செய்யப்பட்ட புகைப்படம்.
இதுபோன்று பெரிய பிரபலங்கள் தொடங்கி யாரையுமே ‘செல்பி’ மோகம் விடவில்லை. அந்நாட்டு நிர்வாகம் ‘செல்பி’ மோகத்தால் ‘செல்பி ஸ்டிக்’ பயன்படுத்தி புகைப்படம் எடுப்பதற்கு பல முக்கிய இடங்களில் தடைவிதித்துள்ளது, குறிப்பிடத்தக்கது.


0 Comments