Subscribe Us

header ads

எங்க குழந்தையோட ஹேர் ஸ்டைல் எவ்வளவு அழகு தெரியுமா?: பிரிட்டனில் பரவும் காய்ச்சல்



பிரிட்டனில் புதிதாக ஒரு காய்ச்சல் படுதீவிரமாகப் பரவி வருகின்றது. அண்மையில் அந்நாட்டில் உள்ள பிரபல தனியார் செய்தி நிறுவனத்தின் இணையதளத்தில் பெர்கஸ் ஹில்மன் என்ற வித்தியாசமான ஹேர்ஸ்டைல் கொண்ட 6 மாத குழந்தையின் புகைப்படம் வெளியாகி பல வாசகர்களின் இதயத்தைக் கொள்ளை கொண்டது.

இதைப் பார்த்துவிட்டு, “எங்க குழந்தையோட ஹேர்ஸ்டைலும்தான் ரொம்ப அழகா இருக்கும்... ஏன் அதையெல்லாம் நீங்க போட மாட்டீங்களா?” என்று கோபப்பட்ட பல பெற்றோர்கள் விதவிதமான ஹேர்ஸ்டைலுடன் தங்கள் செல்லக் குழந்தைகளின் புகைப்படத்தையும் அந்த இணையதளத்திற்கு அனுப்ப, எதுக்குடா வம்பு என்று யோசித்த அந்த செய்தி இணையதளம், தங்கள் இ-மெயில் முகவரிக்கு குழந்தைகளின் புகைப்படங்களை அனுப்பும்படி கேட்டுக்கொண்டுள்ளது.

Post a Comment

0 Comments