ஒரு ஆணுக்கும், பெண்ணுக்குமான உறவு அவ்வளவு சுலபமானது அல்ல. அது ஒரு சிக்கலான உறவே. இந்த உறவு நீடித்து செல்வதற்கு, இருவருமே மனமார்ந்த முயற்சியை மேற்கொள்ள வேண்டும். குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பினாலும், வீட்டு வேலைகளுக்காக அங்கும் இங்கும் ஓடுவதாலும் டென்ஷன் ஏற்படுவதுண்டு. இதனால் தம்பதியினருக்கு இடையே பிரச்சனைகள் எழலாம்.
தங்களின் பாதுகாப்பு தேவையை மனதில் வைத்து கொண்டே, கணவனுடன் திருமண பந்தத்தில் ஈடுபடுகின்றனர். சில நேரங்களில் நிதிக்காகவும், பெண்கள் தங்கள் கணவனை சார்ந்தே வாழ்கின்றனர். இருப்பினும் ஒரு கட்டத்தில் தன் கணவனை விட்டு பிரிய வேண்டிய சூழ்நிலைகள் பெண்களுக்கு ஏற்படும். பெண்களும் விவாகரத்து கோரி நீதிமன்றம் படியேறும் காலம் வந்துவிட்டது. பெண்கள் ஏன் விவாகரத்து செய்ய விரும்புகிறார்கள் என்று பார்க்கலாம்.
• கணவன்மார்கள் தங்கள் மனைவிகளுக்கு நம்பிக்கை துரோகம் செய்தால், பெண்கள் விவாகரத்தை தேர்ந்தெடுக்கிறார்கள். திருமணமான போதிலும் கூட, ஆண்களுக்கு சபல புத்தி இருக்கக்கூடும். பிற பெண்களின் வலையில் எளிதில் விழுந்து விடுவார்கள். இதனைப் படித்த பெண்களால் சகித்துக் கொள்ள முடியாமல் தான் பெண்கள் விவாகரத்தை விரும்புகிறார்கள்.
• சுயமாக சம்பாதிக்கும் பெண்ணாக இருந்தாலும், அவர்கள் விவாகரத்து கோருவதற்கு வாய்ப்புகள் அதிகம். குறிப்பாக கணவன்மார்கள் முரட்டுத்தனமாக நடந்து கொண்டாலோ அல்லது தாங்க முடியாத குணாதிசயத்தோடு நடந்தாலோ, பெண்கள் இந்த முடிவை எடுப்பார்கள். காரணம் நிதி விஷயத்தில் யாரையும் சாராமல் சுயமாக சம்பாதிப்பதால், பெண்களுக்கு இந்த தைரியம் வருகிறது.
• கணவன் உடலுறவில் தகுதியில்லாமல் இருந்தாலும், அந்த காரணத்திற்காகவும் ஒரு பெண் விவாகரத்து கோருவாள்.
• மனைவியை அடிக்கும் கணவருடன் வாழ விரும்புவதில். ஒரு பெண் தன் கணவனை விட்டு விலக விவாகரத்தை கேட்க இதுவும் மிக முக்கியமான ஒரு காரணமாகும்.


0 Comments