Subscribe Us

header ads

ஆஸ்திரியாவில் லாரிக்குள் 70 பிரேதங்கள் கண்டெடுப்பு: கள்ளத்தனமாக குடியேறச் சென்றவர்களா?...



ஆஸ்திரியா - ஹங்கேரி நாட்டின் எல்லைப்பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் அனாதையாக நின்றிருந்த ஒரு லாரிக்குள் இருந்து 70 பிரேதங்களை ஆஸ்திரியா நாட்டு போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

கடந்த புதன்கிழமையில் இருந்து அந்த சாலையின் ஓரமாக நிறுத்தப்பட்டிருந்த அந்த லாரியில் இருந்து கெட்டவாடை வீசியதால் சந்தேகம் அடைந்த போலீசார், நேற்று அந்த லாரியின் மூடிய கதவை உடைத்து திறந்துப் பார்த்தபோது உள்ளே இருந்து சுமார் 70 பிரேதங்கள் மீட்கப்பட்டதாக ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

கள்ளத்தனமாக வெளிநாடுகளுக்கு ஆட்களை கடத்திச் செல்லும் முயற்சியில், போலீசாரிடம் பிடிபடாமல் இருக்க இந்த லாரியை கைவிட்டு தப்பிச்சென்ற உரிமையாளர்களை போலீசார் தேடி வருகின்றனர். 

இதற்கிடையில், இந்தச் சம்பவம் ஆஸ்திரியாவின் வரலாற்றின் இருண்ட தினம். இந்த சோகம் எங்களை வெகு ஆழமாக பாதித்து விட்டது என ஆஸ்திரியா நாட்டின் உள்துறை மந்திரி ஜோஹானா மைக்ல்-லிய்ட்னெர் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக வருபவர்களைப் பற்றி நடைபெற்று வரும் பல்கானஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்கும் தலைவர்களுக்கு இந்த பிரேதங்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக ஜெர்மனி நாட்டின் பிரதமர் ஏஞ்செலா மெர்க்கெல் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments