தேசியப் பட்டியல் ஊடாக தேர்தலில் தோற்றுப் போனவர்களை மீண்டும் நாடாளுமன்றம் அழைத்து வருவதற்கு தேசியப் பட்டியல் நியமனம் அறிமுகம் செய்யப்படவில்லை என்று உதய கம்மன்பில விமர்சித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த விமர்சனத்தை முன்வைத்துள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட உதய கம்மன்பில,
மக்களால் நிராகரிக்கப்பட்டு, தோற்றுப் போனவர்கள் தற்போது தேசியப் பட்டியல் மூலமாக நாடாளுமன்றத்துக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். இதன் பெயர்தான் நல்லாட்சியா? அல்லது இது எந்த வகை ஆட்சி என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.
உண்மையைச் சொல்லப் போனால் நல்லாட்சியின் தலைவர்கள் என்று கூறிக் கொள்வோர் இந்நாட்டின் ஜனநாயகத்துக்கு பெரும் அழிவை ஏற்படுத்தும் செயற்பாடுகளை மேற்கொண்டுள்ளார்கள்.
மக்களின் வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டவர்களை விட புத்திஜீவிகளை நாடாளுமன்றத்தக்கு நியமிப்பதற்கே தேசியப் பட்டியல் முறை உருவாக்கப்பட்டது என்றும் உதய கம்மன்பில தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.


0 Comments