பிரிட்டனின் கண்ணைப் பறிக்கும் சிவப்பு நிற டெலிபோன் பூத்கள் பாரம்பரிய சின்னமாக கருதப்பட்டு வருகின்றன. தொழில்நுட்ப முன்னேற்றத்தால் இவை காணாமல் போகும் நிலை ஏற்பட்ட வேளையில், ‘தின்கிங் அவுட்சைட் த பாக்ஸ்’ என்கிற அமைப்பு வாடகைக்கு கிடைக்கும் அந்த பூத்துகளுக்குள் காபி கடை துவக்கும் வித்தியாசமான ஏற்பாட்டில் இறங்கியுள்ளது.
இதன்படி, முதல் ஆளாக ஜேக் ஹோலியர் (23) என்பவர் இங்கிலாந்தின் பர்மிங்ஹாம் நகரில் இந்த வகை காபி கடையை துவக்கியுள்ளார். மேற்கத்திய நாடுகள் பலவற்றிலும், காபியை பார்சலாக எடுத்துக்கொண்டு செல்லும் வழக்கம் உள்ளது. இந்த புதிய வகை காபி கடைகளிலும் வாடிக்கையாளர்கள் உட்கார முடியாது என்பதால் பார்சல் காபிகள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த காபி கடையை துவங்கிய 2 மணி நேரத்துக்குள் 20 வாடிக்கையாளர்கள் வந்ததாக ஜேக் தெரிவித்தார். எனினும், சிலர் வழக்கத்துக்கு மாறான காபி கடையை ஆச்சர்யமாக பார்க்கின்றனர் என்று அவர் தெரிவித்தார்.



0 Comments