நிலவில் முதன் முதலாக கால் வைத்திருக்க வேண்டியவர் யார் தெரியுமா? நீல் ஆம்ஸ்ட்ராங்குடன் சென்ற பஸ் ஆல்ட்ரின். ஆல்ட்ரின், அமெரிக்காவின் விமானப் படையில் பணிபுரிந்தவர். அதனால் அவர் பைலட்டாக நியமிக்கப்பட்டார். நீல் ஆம்ஸ்ட்ராங்க் அமெரிக்காவின் கப்பல் படையில் வேலைபார்த்தவர். மிகுந்த தைரியசாலி என்பதால்தான் இந்த பயணத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் கோ-பைலட்(இணை விமானி).
இவர்கள் சென்ற அப்பல்லோ விண்கலம் நிலவை அடைந்ததும் நாசாவிலிருந்து 'பைலட் பர்ஸ்ட்' என்று கட்டளை பிறப்பிக்கப்பட்டது. ஆனால், ஆல்ட்ரினுக்கோ மனதில் சின்ன தயக்கம். இதுவரை அறியாத ஒரு கிரகத்தில் கால் வைக்கப்போகிறோம் ஏதாவது அசம்பாவிதம் நடந்து விடுமோ? என்ற தயக்கத்தில் சில நொடிகள்தான் தாமதித்திருப்பார். அதற்குள் நாசாவில் இருந்து இரண்டாவது கட்டளை பிறப்பிக்கப்பட்டது. 'கோ பைலட் நெக்ஸ்ட்'. நீல் ஆம்ஸ்ட்ராங் கட்டளை வந்த அடுத்த நொடி காலடி எடுத்துவைத்தார்.
தைரியசாலிகளையே வரலாறு நினைவு வைத்திருக்கும் என்று பல தன்னம்பிக்கை பேச்சாளர்கள் பஸ் ஆல்ட்ரினின் தயக்கத்தை சுட்டிக் காட்டி, வாழ்க்கையில் தயக்கம் இருக்கக்கூடாது என்று கூறுவர். இப்படிப்பட்ட பஸ் ஆல்ட்ரின், சமீபத்தில் வெளியிட்டுள்ள தகவல் பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
முதன் முதலாக மனிதர்களை சந்திரனுக்கு ஏற்றிச் சென்ற அப்பல்லோ 11 விண்கலத்தில் நீல் ஆம்ஸ்ட்ராங் உடன் பயணம் செய்து சந்திரனில் இறங்கிய இரண்டாவது மனிதர் என்ற பெருமையைப் பெற்ற ஆல்ட்ரின் ஜூலை 16, 1969 இல் அப்பல்லோ 11 விண்கலத்தில் நீல் ஆம்ஸ்ட்ராங் உடன் சந்திரனை நோக்கிய பயணத்தை ஆரம்பித்தார்.
இதற்காக அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள ஹவுஸ்டனிலிருந்து சந்திரனுக்கு சென்று திரும்பி வந்தது வரையிலுமான பயண செலவுகளுக்காக தனக்கு கொடுக்கப்பட்ட தொகை 33.31 டாலர்தான் என்று ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இந்தப் பணமும் காரிலிருந்து விமான நிலையங்களுக்கு சென்றதற்கான செலவுதான். மற்றபடி எல்லாமே அமெரிக்க அரசின் செலவுதானே.


0 Comments