Subscribe Us

header ads

தேர்தல் மோசடிகளை அறிவிக்க விசேட குறுந்தகவல் சேவை அறிமுகம்


எதிர்வரும் தேர்தலின் போது இடம்பெறக்கூடிய மோசடிகளை உடனே அறிவிப்பதற்காகவும், வாக்களிப்பு நிலைய கடமைகளை ஒழுங்குபடுத்துவதற்காகவும் குறுந்தகவல் சேவை ஒன்று இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
குறித்த குறுந்தகவல் சேவையை EC <இடைவெளி> EV <இடைவெளி> குறித்த மாவட்டம் <இடைவெளி> முறைப்பாட்டை பதிவு செய்து 2343 என்ற இலக்கத்திற்கு அனுப்பி வைப்பதன் மூலம் நேரடியாக தேர்தல்கள் திணைக்களத்திற்கு முறைப்பாடு செய்ய முடியும்.
இதேவேளை, இன்றிலிருந்து தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில் கைது செய்யப்படுபவர்களுக்கு பொலிஸ் பிணை வழங்கும் எதிர்பார்ப்பு இல்லை எனவும் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments