யாழ்ப்பாணத்தில் இன்று காலை முதல் பொது மக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பதில் ஈடுபடுவதை காணக் கூடியதாகவுள்ளது.
யாழ்மாவட்டத்தின் பல பகுதிகளிலும் உள்ள வாக்களிப்பு நிலையங்களில் பொதுமக்கள் மிகவும் அமைதியான முறையிலும் பதற்றமற்ற நிலையிலும் வாக்களிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதேவேளை நேற்று இரவு சில கட்சிகள் தமது துண்டுப் பிரசுரங்களை வாக்களிப்பு நிலையங்களுக்கு அண்மையாக அதிகளில் வீசிவிட்டு சென்றுள்ளதையும் அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.
எந்த வகையான தேர்தல் சம்பந்தமான வன்செயல்களும் இடம்பெறாத நிலைமையில் வாக்களிப்பு அமைதியான முறையில் நடை பெறுவதையும் காணக் கூடியதாகவுள்ளது.
வாக்களிப்பு நிலையங்களில் பொலிசார் கடமையில் ஈடுபட்டுள்ளதுடன் பொலிசாரின் ரோந்து நடவடிக்கைகளும் அதிகரித்துக் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

0 Comments