Subscribe Us

header ads

ஐன்ஸ்டைனைவிட அதிக அறிவுத் திறன் கொண்ட 12 வயது இங்கிலாந்து சிறுமி...



இங்கிலாந்தை சேர்ந்த 12 வயது சிறுமி அறிவுத் திறன் சோதனையில் இதுவரை யாரும் பெறாத வகையில் அதிகப்பட்சமாக 162 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார்.

ஹார்லோ பகுதியை சேர்ந்த ஏழாம் வகுப்பு மாணவியான நிகோல் பார், கடந்த வாரம் நடத்தப்பட்ட அறிவுத் திறன் சோதனையில் 162 புள்ளிகள் பெற்றார்.  இது இயற்பியல் விஞ்ஞானி ஹாக்கிங், மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் மற்றும் ஐன்ஸ்டீனை விட அதிகம். மேற்குறிப்பிட்ட அனைவரும் 160 ஐ.க்யூ பெற்றுள்ளனர் என்பது கணக்கிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த சாதனை பற்றி நிகோல் பார் கூறும் போது ”இவ்வளவு மதிப்பெண் எடுப்பேன் என்று எதிர்பார்க்கவில்லை. இது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது” என தெரிவித்துள்ளார்.

நிகோலுக்கு 10 வயதாகும்போதே, கணிதப் பாடத்தில் அவரது வகுப்பு மாணர்களைவிடப் பலமடங்கு சிறந்து விளங்கினார் என அவருடைய ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இவருக்கு இலக்கியம், இசை, நாடகத்திலும் மிகுந்த ஈடுபாடு உண்டு. 

Post a Comment

0 Comments