நடைபெற்று முடிந்த எட்டாவது பாராளுமன்றத் தேர்தலில் 106ஆசனங்களை பெற்று ஆளும் ஐக்கிய தேசிய கட்சி வெற்றியீட்டியுள்ளது. அத்துடன் 95 ஆசனங்களை பெற்றுக்கொண்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தேர்தலில் தோல்வியை தழுவியுள்ளது.
இலங்கை தமிழரசுக் கட்சியின் சின்னத்தில் போட்டியிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 16 ஆசனங்களையும் மக்கள் விடுதலை முன்னணி 6ஆசனங்களையும் பாராளுமன்றத் தேர்தலில் பெற்றுக்கொண்டுள்ளன. அத்துடன் சிறிலங்கா முஸ் லிம் காங்கிரஸும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியும் தலா ஒரு ஆசனம் வீதம் பெற்றுள்ளன.
நடந்து முடிந்த தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி 5,098,927 (45.66மூ) வாக்குகளையும் ஐக்கிய மக் கள் சுதந்திர முன்னணி 4,732,669 (42.38மூ) வாக்குகளையும் மக்கள் விடுதலை முன்னணி 543,944 (4.87%) வாக்குகளையும் பெற்றுள்ளன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 515,963 (4.62ம%) வாக்குகளையும் பெற்றுக்கொண்டுள்ளது.
ஈழ மக்கள் ஜனநாய கக் கட்சி 33இ481 (0.30மூ) வாக்குகளையும் பெற்றுள்ளது. அத்துடன் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி44,193 (0.40%) வாக்குகளையும் பெற்றுள்ளது.
எட்டாவது பாராளுமன்றத் தேர்தலில் தேசிய பட்டியல் ஊடாக ஐக்கிய தேசிய கட்சி 13 ஆசனங்களையும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 12 ஆசனங்களையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 2 ஆசனங்களையும் மக்கள் விடுதலை முன்னணி 2 ஆசனங்களையும் பெற்றுக்கொண்டுள்ளன.
மாவட்ட ரீதியில் பார்க்கும்போது ஐக்கிய தேசிய கட்சி 11 மாவட்டங்களில் வெற்றிபெற்றுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 8 மாவட்டங்களை வெற்றிபெற்றுள்ளதுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 3 மாவட்டங்களிலும் வெற்றியீட்டியுள்ளது. ஐக்கிய தேசிய கட்சி பொலன்னறுவை, திருகோணமலை, கண்டி, கம்பஹா, கொழும்பு, கேகாலை, பதுளை, நுவரெலியா, மாத்தளை, திகாமடுல்ல, புத்தளம் மாவட்டங்களில் வெற்றியீட்டியுள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அம்பாந்தோட்டை, காலி, மாத்தறை, அனுராதபுரம், குருணாகல், மொனராகலை, இரத்தினபுரி, களுத்துறை, ஆகிய மாவட்டங்களில் வெற்றியை உறுதி செய்துகொண்டுள்ளது. அத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யாழ்ப்பாணம், வன்னி மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் வெற்றியீட்டியுள்ளது.
அந்தவகையில் பாராளுமன்றத் தேர்தலில் அறுதிப் பெறும்பான்மையை எந்தவொரு கட்சியும் பெறாத நிலையில் தேர்தலில் கூடிய ஆசனங்களை வெற்றிக்கொண்டுள்ள ஐக்கிய தேசிய கட்சி ஆட்சியமைக்கவுள்ளது. அத்துடன் ஐக்கிய தேசிய கட்சியும் சுதந்திரக் கட்சியும் இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்குமான பேச்சுவார்த்தைகளும் இடம்பெற்றுவருகின்றன.
நடந்து முடிந்த எட்டாவது பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சிக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கும் கடும் போட்டி நிலவியது. நேற்றுக்காலை தேர்தல் முடிவுகள் வெளிவரும்வரை எந்தக் கட்சி வெற்றிபெறும் என்ற ஊகிக்க முடியாதளவுக்கு போட்டி காணப்பட்டது. எனினும் ஐக்கிய தேசிய கட்சி 105 ஆசனங்களை பெற்று வெற்றியை தனதாக்கிக்கொண்டது.
பாராளுமன்றத் தேர்தலில் மொத்தமாக ஒரு கோடியே 50 இலட்சத்து 44490 பேர் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றிருந்தனர். எனினும் தேர்தலில்11684098 வாக்காளர்கள் வாக்களித்திருந்தனர். அவற்றில்517123 வாக்குகள் நிராகரிக்கப்பட்ட நிலையில் 11166975 வாக்குகள் செல்லுபடியானதாக அறிவிக்கப்பட்டன.
12314 வாக்களிப்பு நிலையங்களில் நடைபெற்ற தேர்தல் வாக்களிப்பு நேற்று முன்தினம் மாலை நான்கு மணிக்கு நிறைவடைந்தது. 225 உறுப்பினர்கள் எட்டாவது பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்படுவதற்காக கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களின் சார்பாக 6151 வேட்பாளர்கள் போட்டியிட்டிருந்தனர்.
கொழும்பு மாவட்டம்
ஐக்கிய தேசிய கட்சி கொழும்பு மாவட்டத்தில் 640,743 வாக்குகளையும் 11 ஆசனங்களையும் பெற்றது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 474,063 வாக்குகளையும் 7 ஆசனங்களையும் பெற்றது. மக்கள் விடுதலை முன்னணி 81,391 வாக்குகளையும் 1 ஆசனத்தையும் பெற்றுக்கொண்டது. கொழும்பு மாவட்டத்தில் 1586598 பேர் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றிருந்தனர். அத்துடன் 792 பேர் தேர்தலில் போட்டியிட்டிருந்தனர்.
கம்பஹா
ஐக்கிய தேசிய கட்சி கம்பஹா மாவட்டத்தில் 577,004 வாக்குகளையும் 9 ஆசனங்களையும் பெற்றது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 549,958 வாக்குகளையும் 8 ஆசனங்களையும் பெற்றது. மக்கள் விடுதலை முன்னணி 87,880 வாக்குகளையும் 1 ஆசனத்தையும் பெற்றுக்கொண்டது. இந்த மாவட்டத்தில் 1637537 பேர் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றிருந்தனர்.
களுத்துறை
ஐக்கிய தேசிய கட்சி களுத்துறை மாவட்டத்தில் 310,234 வாக்குகளையும் 4 ஆசனங்களையும் பெற்றது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 338,801 வாக்குகளையும் 5 ஆசனங்களையும் பெற்றது. மக்கள் விடுதலை முன்னணி 38,475 வாக்குகளையும் 1 ஆசனத்தையும் பெற்றுக்கொண்டது.
கண்டி
ஐக்கிய தேசிய கட்சி கண்டி மாவட்டத்தில் 440,761 வாக்குகளையும் 7 ஆசனங்களையும் பெற்றது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 309,152 வாக்குகளையும் 5 ஆசனங்களையும் பெற்றது. மக்கள் விடுதலை முன்னணி 30,669 வாக்குகளையும் பெற்றுக்கொண்டது.
நுவரெலியா
ஐக்கிய தேசிய கட்சி நுவரெலியா மாவட்டத்தில் 228,920 வாக்குகளையும் 5 ஆசனங்களையும் பெற்றது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 147,348 வாக்குகளையும் 3 ஆசனங்களையும் பெற்றது. மக்கள் விடுதலை முன்னணி 5,590 வாக்குகளையும் பெற்றுக்கொண்டது.
மாத்தளை
ஐக்கிய தேசிய கட்சி மாத்தளை மாவட்டத்தில் 138,241 வாக்குகளையும் 3 ஆசனங்களையும் பெற்றது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 126,315 வாக்குகளையும் 2 ஆசனங்களையும் பெற்றது. மக்கள் விடுதலை முன்னணி 10,947 வாக்குகளையும் பெற்றுக்கொண்டது.
பதுளை
ஐக்கிய தேசிய கட்சி பதுளை மாவட்டத்தில் 258,844 வாக்குகளையும் 5 ஆசனங்களையும் பெற்றது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி179,459 வாக்குகளையும் 3 ஆசனங்களையும் பெற்றது. மக்கள் விடுதலை முன்னணி 21,445 வாக்குகளையும் பெற்றுக்கொண்டது.
மொனராகலை
ஐக்கிய தேசிய கட்சி மொனராகலை மாவட்டத்தில் 110,372 வாக்குகளையும் 2 ஆசனங்களையும் பெற்றது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 138,136 வாக்குகளையும் 3 ஆசனங்களையும் பெற்றது. மக்கள் விடுதலை முன்னணி 13,626 வாக்குகளையும் பெற்றுக்கொண்டது.
இரத்திரனபுரி
ஐக்கிய தேசிய கட்சி இரத்தினபுரி மாவட்டத்தில் 284,117 வாக்குகளையும் 5 ஆசனங்களையும் பெற்றது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 323,636 வாக்குகளையும் 6 ஆசனங்களையும் பெற்றது. மக்கள் விடுதலை முன்னணி 21,525 வாக்குகளையும் பெற்றுக்கொண்டது.
கேகாலை
ஐக்கிய தேசிய கட்சி கேகாலை மாவட்டத்தில் 247,467 வாக்குகளையும் 5 ஆசனங்களையும் பெற்றது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 227,208 வாக்குகளையும் 4 ஆசனங்களையும் பெற்றது. மக்கள் விடுதலை முன்னணி 18,184 வாக்குகளையும் பெற்றுக்கொண்டது.
குருணாகல்
ஐக்கிய தேசிய கட்சி குருணாகல் மாவட்டத்தில் 441,275 வாக்குகளையும் 7 ஆசனங்களையும் பெற்றது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 474,124 வாக்குகளையும் 8 ஆசனங்களையும் பெற்றது. மக்கள் விடுதலை முன்னணி 41,077 வாக்குகளையும் பெற்றுக்கொண்டது. எனினும் மக்கள் விடுதலை முன்னணிக்கு எந்த ஆசனமும் கிடைக்கவில்லை.
புத்தளம்
ஐக்கிய தேசிய கட்சி புத்தளம் மாவட்டத்தில் 180,185 வாக்குகளையும் 5 ஆசனங்களையும் பெற்றது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 153,130 வாக்குகளையும் 3 ஆசனங்களையும் பெற்றது. மக்கள் விடுதலை முன்னணி 12,211 வாக்குகளையும் பெற்றுக்கொண்டது.
அனுராதபுரம்
ஐக்கிய தேசிய கட்சிஅனுராதபுரம் மாவட்டத்தில்213,072 வாக்குகளையும் 4 ஆசனங்களையும் பெற்றது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 229,856 வாக்குகளையும் 5 ஆசனங்களையும் பெற்றது. மக்கள் விடுதலை முன்னணி 28,701 வாக்குகளையும் பெற்றுக்கொண்டது.
பொலன்னறுவை
ஐக்கிய தேசிய கட்சி பொலன்னறுவை மாவட்டத்தில்118,845 வாக்குகளையும் 3 ஆசனங்களையும் பெற்றது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 103,172 வாக்குகளையும் 2 ஆசனங்களையும் பெற்றது. மக்கள் விடுதலை முன்னணி 13,497 வாக்குகளையும் பெற்றுக்கொண்டது.
அம்பாந்தோட்டை
அம்பாந்தோட்டை மாவட்டத்தில் . ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 196,980 வாக்குகளையும் 4 ஆசனங்களையும் பெற்றது. ஐக்கிய தேசிய கட்சி 130,433 வாக்குகளையும் 2 ஆசனங்களையும் பெற்றது. மக்கள் விடுதலை முன்னணி 36,527 வாக்குகளையும் 1 ஆசனங்களையும் பெற்றுக்கொண்டது.
காலி
காலி மாவட்டத்தில் . ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 312,518 வாக்குகளையும் 6 ஆசனங்களையும் பெற்றது. ஐக்கிய தேசிய கட்சி 265,180 வாக்குகளையும் 4 ஆசனங்களையும் பெற்றது. மக்கள் விடுதலை முன்னணி 37,778 வாக்குகளையும் பெற்றுக்கொண்டது.
மாத்தறை
மாத்தறை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 250,505 வாக்குகளையும் 5 ஆசனங்களையும் பெற்றது. ஐக்கிய தேசிய கட்சி 186,675 வாக்குகளையும் 3 ஆசனங்களையும் பெற்றது. மக்கள் விடுதலை முன்னணி 35,270 வாக்குகளையும் பெற்றுக்கொண்டது.
திகாமடுல்லை
ஐக்கிய தேசிய கட்சி திகாமடுல்லை மாவட்டத்தில் 151,013 வாக்குகளையும் 4 ஆசனங்களையும் பெற்றது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 89,334 வாக்குகளையும் 2 ஆசனங்களையும் பெற்றது. இலங்கை தமிழரசு கட்சி 45,421 வாக்குகளையும் 1 ஆசனத்தை பெற்றுக்கொண்டது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 33,102 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது. ஆனால் இந்தக் கட்சியினால் எந்தவொரு ஆசனத்தையும் பெறவில்லை.
திருகோணமலை
ஐக்கிய தேசிய கட்சி திருகோணமலை மாவட்டத்தில் 83,638 வாக்குகளையும் 2 ஆசனங்களையும் பெற்றது. இலங்கை தமிழரசுக் கட்சி 45,894 வாக்குகளையும் 1 ஆசனங்களையும் பெற்றது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 38,463 வாக்குகளையும் 1 ஆசனங்களையும் பெற்றது.
யாழ்ப்பாணம்
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இலங்கை தமிழரசு கட்சி 207,577 வாக்குகளையும் 5 ஆசனங்களையும் பெற்றது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 30,232 வாக்குகளையும் 1 ஆசனத்தையும் பெற்றது. ஐக்கிய தேசிய கட்சியும் 20,025 வாக்குகளையும் 1 ஆசனத்தையும் பெற்றுக்கொண்டது.
வன்னி
வன்னி மாவட்டத்தில் இலங்கை தமிழரசு கட்சி 89,886 வாக்குகளையும் 4 ஆசனங்களையும் பெற்றது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 20,965 வாக்குகளையும் 1 ஆசனங்களையும் பெற்றது. ஐக்கிய தேசிய கட்சியும் 39,513 வாக்குகளையும் 1 ஆசனத்தையும் பெற்றுக்கொண்டது.
மட்டக்களப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் இலங்கை தமிழரசு கட்சி 127,185 வாக்குகளையும் 3 ஆசனங்களையும் பெற்றது. முஸ்லிம் காங்கிரஸ் 38,477 வாக்குகளையும்1 ஆசனங்களையும் பெற்றது. ஐக்கிய தேசிய கட்சியும் 32,359 வாக்குகளையும் 1 ஆசனத்தையும் பெற்றுக்கொண்டது. இந்தத் தேர்தலில் வாக்களிப்பு நடவடிக்கைகளில் 125000 அரச ஊழியர்களும் வாக்கு எண்ணும் செயற்பாடுகளில் 75000 ஈடுபட்டனர். அத்துடன் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொலிஸாரும் தேர்தல் வாக்களிப்பு மற்றும் வாக்கு எண்ணும் பணிகளில் ஈடுபட்டனர்.
30 ஆயிரம் பேர் கண்காணிப்பில்
தேர்தல் வாக்களிப்பை கண்காணிக்கும் செயற்பாடுகளில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் ஈடுபட்டனர். பொதுநலவாய தேர்தல் கண்காணிப்பு குழு ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பு குழு மற்றும் தெற்காசிய தேர்தல் கண்காணிப்பு அதிகாரசபை போன்ற சர்வதேச கண்காணிப்பு நிறுவனங்கள் கண்காணிப்பில் ஈடுபட்டன.
தேர்தல் கண்காணிப்பில் ஈடுபட்ட சர்வதேச கண்காணிப்பு நிறுவனங்கள் இன்று அல்லது நாளை தமது அறிக்கைகளை சமர்ப்பிக்கவுள்ளன. பொதுநலவாய தேர்தல் கண்காணிப்பு குழுவின் 9 அதிகாரிகள் தேர்தல் கண்காணிப்பில் ஈடுபட்டனர். உள்நாட்டு கண்காணிப்பை பொறுத்தவரை பெப்ரல் அமைப்பு 12,314 தேர்தல் கண்காணிப்பாளர்களை பணியில் ஈடுபடுத்தியுள்ளது. உள்நாட்டு மற்றும் சர்வதேச மட்டத்திலும் மொத்தமாக 30 ஆயிரம் கண்காணிப்பாளர்கள் தேர்தலை கண்காணிக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டனர்.
எட்டாவது பாராளுமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்புகள் மிகவும் அமைதியான முறையில் நேற்று முன்தினம் இடம்பெற்றதுடன் நாடளாவிய ரீதியில் 70 வீதமான வாக்களிப்பும் பதிவு செய்யப்பட்டுள்ளது. பெரும்பாலும் அனைத்து மாவட்டங்களிலும் 65 வீதத்தை தாண்டிய வாக்களிப்பு பதிவாகியிருந்தது. ஆங்காங்ககே சிறியளவிலான வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியிருந்தாலும் நாடளாவிய ரீதியில் பொதுவாக எட்டாவது பாராளுமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு மிகவும் அமைதியான முறையில் நடைபெற்றது.
தேர்தல் வாக்களிப்பை பொறுத்தவரை எந்தவொரு மாவட்டத்திலும் பாரியளவில் வன்முறைச் சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை. நேற்றுக்காலை 7 மணிமுதல் 4 மணிவரை வாக்களிப்பு இடம்பெற்றதுடன் மக்கள் மிகவும் ஆர்வமாக வாக்களித்தனர்.

0 Comments