நடந்து முடிந்த எட்டாவது பாராளுமன்றத் தேர்தலில் ஜனநாயகக் கட்சி படு தோல்வியடைந்துள்ளது. ஜனநாயகக் கட்சியின் சார்பில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட கட்சியின் தலைவர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவும் படு தோல்வியடைந்துள்ளார்.
இம்முறை கொழும்பு மாவட்டத்தில் வெறுமனே 5,238 வாக்குகளை மட்டுமே ஜனநாயகக் கட்சி பெற்றுள்ளது. அது மட்டுமன்றி நாடளாவிய ரீதியிலும் மிகவும் குறைந்தளவிலான வாக்குகளையே ஜனநாயகக் கட்சி பெற்றுள்ளது.
கம்பஹா மாவட்டத்தில் 4,706 வாக்குகளை மட்டுமே ஜனநாயகக் கட்சி பெற்றுள்ளது. அந்த மாவட்டத்தில் சரத் பொன்சேகாவின் பாரியார் அனோமா பொன்சேகா போட்டியிட்டிருந்தார். அவரும் படுதோல்வியடைந்துள்ளார்.
கடந்த பாராளுமன்றத் தேர்தலில் மக்கள் விடுதலை முன்னணியுடன் இணைந்து ஜனநாயக தேசியக் கூட்டணி என்ற பெயரில் போட்டியிட்ட சரத் பொன்சேகாவின் கட்சி நாடளாவிய ரீதியில் ஏழு ஆசனங்களைப் பெற்றிருந்தது. 110683 வாக்குகளை பெற்று இரண்டு ஆசனங்களை பெற்றிருந்தது.
எனினும் இம்முறை ஒரு ஆசனத்தையேனும் அக்கட்சியினால் பெற முடியவில்லை.கடந்த 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் சரத் பொன்சேகா எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 Comments