அமெரிக்காவின் கலிபோர்னியா நகரைச் சேர்ந்த ஆம்பர் குஸ்மேன்(28) என்பவர் ‘பார்பி’ பொம்மைபோல வாழும் வாழ்க்கை மிகவும் பிடித்திருக்கிறது என்கிறார்.
ஆம்பர் தனது பதினெட்டு வயதில் ‘தசை வளக்கேடு’ (muscular dystrophy) என்ற நோயால் பாதிக்கப்பட்டார். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இயல்பாக நடக்கும் போதே ஏகப்பட்ட எடையை சுமந்து கொண்டு போவதுபோல் தோன்றும்.
தசை வளக்கேட்டு நோயால் கை, கால்கள் வலுவிழந்து நடக்கக் கூட இன்னொருவரது துணையைத் தேட வேண்டி வரும். நீண்ட தூரம் நடக்கவோ, நிற்கவோ அல்லது உட்காரவோ முடியாத நிலை ஏற்படும். நினைத்தபடி உணவும் உண்ண முடியாததால் பொம்மைப் போன்ற உடலமைப்புடன் இருக்கிறார், ஆம்பர்.
ஆனால், இந்த பிரச்சனையால்தான் பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்பதை கடந்த 2012-ஆம் ஆண்டு வரை ஆம்பர் அறிந்திருக்கவில்லை.
சிறு வயதிலிருந்தே அழகான பொம்மை போல இருந்ததால் மாடலிங் செய்துவந்தார் ஆம்பர். இந்த நோயால் பாதிக்கப்பட்ட பின்னர், சமீபத்தில் ‘பார்பி’ பொம்மைகள்போல உடையணிந்து ‘யூடியுப்’ மற்றும் சமூக வலைதளங்களில் தனது வீடியோ மற்றும் புகைப்படங்களை பதிவேற்றம் செய்துள்ளார்.
தனக்கு ஏற்பட்ட நோயால் தொய்வடையாமல் தொடர்ந்து உற்சாகமாக வெளியிட்டு வரும் புகைப்படங்களால் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட ரசிகர்களை தன்வசப்படுத்தியுள்ளார் இந்த ‘பார்பி’ பெண்.
தற்போது 28 வயது பருவ மங்கையாக உள்ள ஆம்பர், தனது ரசிகர்கள் தன்னை ஒரு செல்ல ‘பார்பி’ பொம்மையாக கொண்டாடப்படுதை எண்ணி மட்டற்ற மகிழ்ச்சி அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.




0 Comments