Subscribe Us

header ads

அக்கரைப்பற்று வலயக் கல்வி வலயத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இப்தார் நிகழ்வு (PHOTOS)

அபு அலா - 


அக்கரைப்பற்று வலயக் கல்வி வலயத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இப்தார் நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை (30) வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.எம்.காசீம் தலைமையில் வலயக் கல்வி வளாகத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறப்பித்தார்.

மேலும் இந்நிகழ்வில், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம், எம்.எஸ்.உதுமாலெப்பை, மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.நிசாம்   மற்றும் அதிபர்கள் ஆசிரியர்கள் உள்ளிட்ட பல கல்விமான்கள் பலர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வின்போது, மௌலவி யூ.எம்.நியாஸியினால் விஷேட துஆப் பிரார்த்தனையும் நடாத்தி வைக்கப்பட்டது.




Post a Comment

0 Comments