Subscribe Us

header ads

ISIS அமைப்பினால் இலங்கையில் ஆபத்து கிடையாது -காவல்துறை ;மூக்குடைந்த ஞானசார


ஐ.எஸ்.ஐ.எஸ்.களினால் இலங்கையி ல் ஆபத்து கிடையாது என காவல்துறையினர் திட்டவட்டமாக அறிவித்துள்ளனர்.இலங்கையில் குறித்த தீவிரவாத இயக்கம் இயங்கவில்லை என சுட்டிக்காட்டியுள்ளனர்.

தமது உயிருக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளினால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலபொடத்தே ஞானசார தேரர் நேற்றைய தினம் காவல்துறையினரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.அண்மையில் சிரியாவில் கொல்லப்பட்ட இலங்கையரான ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதி தம்மை கொலை செய்ய திட்டமிட்டிருந்தார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.


எனினும் குறித் தீவிரவாத இயக்கம் இலங்கையில் செயற்பட்டு வருவதற்கான எவ்வித ஆதரங்களும் கிடையாது எனவும், அவ்வாறான அச்சுறுத்தல்கள் கிடையாது எனவும் காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

Post a Comment

0 Comments