இலங்கை முஸ்லிம் இளைஞர் ஒருவர் ISIS அமைப்பில் இணைந்து மரணமடைந்ததாக கிடைக்கப்பெற்ற தகவல் நம் சமூகம் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும் என்பதற்கான நினைவூட்டலே.
இந்த செய்தி உலகமட்டத்தில், குறிப்பாக இலங்கை நாட்டில் இனவாதம் பேசும் பொதுபல சேன போன்ற அமைப்புக்கு நம்மை பலிவாங்க கிடைத்துள்ள மிகப்பெரிய அனுகுண்டாகும்.
இந்த செய்தியை வைத்து இன்னும் பல மாதங்களுக்கு விமர்சனங்களும் எதிர்ப்புக்களும் எம்மை நோக்கி வந்துகொண்டே இருக்கும்.
அன்பின் இளைஞர்களே..!
1. இந்த ISIS அமைப்பு முஸ்லிம்ளும்களுக்கு சொந்தமானது அல்லது,
2. இந்த ISIS என்பது இஸ்லாத்தையோ முஸ்லிம்களையோ
பாதுகாப்பதற்காக உறுவாக்கப்பட்டதல்ல,
3. வலைகுடா நாடுகளை கைப்பற்றும் தூரநோக்குடன் மேற்கத்தய மற்றும் இஸ்ரேலிய நாடுகளின் பண, படை மற்றும் சிந்தனையில் உதயமாகிய ஒரு தீவிரவாத அமைப்பு என்பதை கவத்தில் கொள்வோம்.
4. இந்த அமைப்புக்கு சாதகமாக எழுதுவதையோ பேசுவதையோ நிருத்திக்கொள்வோம்.
5. இது தொடர்பாக போட்டோக்கள், பதிவுகள் எம்முடைய போன், கம்பியூட்டர்களில் பாதுகாத்துவைத்திருந்தால் இல்லாது செய்துவிடுவோம்.
நண்பர்களே விழிப்புணர்வுடன் செயற்படுவோம், முடியுமானவரை நண்பர்களுக்கு பகிரவும்.
மாற்றங்கள் தேவை / இஸ்ஸதீன் றிழ்வான்


0 Comments