-Akkarai Newsline -
இந்த நாட்டு அரசியலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு இன்றைய காலத்தில் மிகவும் அவசியமானதாக பார்க்கப்படுகின்ற நிலையில் இந்த கட்சியின் மூலம் நாட்டு மக்கள் நன்மையடையும் திட்டங்களையே முன்னெடுக்கப்படும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன் தெரிவித்தார்.
புத்தளம் மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சார்பில் ஜக்கிய தேசிய கட்சியில் போட்டியிடும்,முன்னாள் வடமேல் மாகாண அமைச்சர் எம்.எச்.எம்.நவவியின் வெற்றியினை உறுதி செய்யும் முதலாவது பிரசாரக் கூட்டம் புத்தளம் தில்லையடி அம்மார் மண்டபத்தில் நேற்று (2015-07-24) இரவு இடம் பெற்ற போது அமைச்சரும்,தேசிய தலைவருமான றிசாத் பதியுதீன் மேற்கண்டவாறு கூறினார்.
மேலும் அவர் இங்கு பேசுகையில் –
இன்று என்மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுதான் குருநாகல் மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் சார்பில் ஜக்கிய தேசிய கட்சியில் பெயர் குறிப்பிடப்பட்டிருந்த ரிஸ்வி ஜவாஹர்ஷா என்பவரது பெயரை அகற்றி அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வேட்பாளரான வைத்திய கலாநிதி ஷாபி அவர்களின் பெயர் சேரக்கப்பட்டதாகவும்,இந்த வேலையினை நான் செய்ததாக முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் கூறிவருகின்றார்.
இந்த விடயம் தொடர்பில் எனது விளக்கத்தை புத்தளத்தில் தெரிவிப்பது பொருத்தம் என நம்புகின்றேன்.கண் மூடித்தனமான அரசியல் செய்வதற்கு நாங்கள் வெறும் கட்சிகளை மட்டும் கட்டிப்பிடித்துக் கொண்டு இருப்பவர்கள் அல்ல,எந்த பணியினை நாம் செய்ய ஆரம்பித்தாலும்,அதில் சமூகத்தின் நன்மை,எதிர்காலம் என்பனவற்றை முன்னிறுத்தியே செயலாற்றும் கொள்கை கொண்டவர்கள்,பிரதமராக ரணில் விக்ரம சிங்க அவர்கள் வருவதற்கு முன்னார் ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்ததுடன்,ஜக்கிய தேசிய கட்சியுடன் நாம் உடன்படிக்கையொன்றினை செய்து கொண்டோம்,அந்த உடன்படிக்கை பிரகாரம் எம்மால் குறிப்பிடப்பட்ட சில மாவட்டங்களில் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் ஆசன ஒதுக்கீடு தொடர்பிலும் அந்த உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வகையில் எமது கட்சியின் சார்பில் ஜக்கிய தேசிய கட்சியில் போட்டியிடவென குருநாகல் வைத்தியசாலையில் வைத்தியராக பணியாற்றும் ஷாபி அவர்கள் தெரிவு செய்யப்பட்டு வேட்மனுவிலும் கையொப்பம் இட்டார்.
இதன் பிற்பாடு இரண்டு தினங்களுக்கு பின்னர் ஷாபி அவர்களின் பெயர்கள் அளிக்கப்பட்டதாக எனக்கு தகவல் கிடைத்தது,உடனே ஸ்ரீகொத்தாவான ஜக்கிய தேசிய கட்சியின் தலைமையகத்துக்கு சென்று நிலைமையினை பார்வையிட்ட போது ஷாபியின் பெயர் அகற்றப்பட்டு ரிஸ்வி ஜவாஹர்ஷாவின் பெயர் இடம் பெற்றிருந்தது.அப்போது நான் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கும்,தவிசாளர் மலிக் சமரவிக்ரமவிற்கும் தொலைபேசி எடுத்து விடயம் தொடர்பில் கேட்டேன்,அப்போது அவர்கள் கூறிய விடயம் அமைச்சர் றிசாத் பதியுதீனின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சார்பில் ஒரு வேட்பளார் இந்த பட்டியலில் இடம் பெற்றால் தான் தனது வேட்பாளரை நிறுத்தப் போவதில்லை என ரவூப் ஹக்கீம் அவர்கள் கூறியதாக தெரிவித்தனர்.அதனால் இந்த சம்பவம் இடம் பெற்றிருக்கலாம் என்றனர்.அப்போது நான் அவர்களிடம் சொன்னேன் எனக்கு எந்தவொரு ஆட்சேபனையும் இல்லை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளரை பட்டியில் இடுவதுடன்,எனது கட்சியுடன் செய்து கொண்ட உடன்படிக்கை பிரகாரம் எனக்கொரு ஆசனத்தை தாருங்கள் என்று ஜக்கிய தேசிய கட்சியின் தலைமையிடம் கேட்டேன்,சில மணித்தியாலயங்கள் கழித்து அறிவிப்பதாக தெரிவித்தனர்.
அதன் பிற்பாடு ஜக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் அவர்கள் என்னுடன் தொடர்பு கொண்டு அகில இலங்கை மக்கள் சார்பில் வேட்பாளர் நிறுத்தப்படுவார் என்றால் நான் எனது கட்சி வேட்பாளரை ஜக்கிய தேசிய கட்சியில் போட்டியிட அனுமதிக்கப் போவதில்லை என்று அமைச்சர் ரவூப் ஹக்கீம் கூறியதால்,வைத்திய கலாநிதி ஷாபி அவர்களை வேட்புமனுவில் மீண்டும் கையொப்பமிடுமாறு தெரிவிக்கப்பட்டது.இது தான் நடந்த சம்பவம்,இதனை திரிவுபடுத்தி மக்கள் மத்தியில் பிழையான கருத்துக்களை கொண்டு செல்வதானது அபத்தமானது என்பதை இவ்வாறு பேசுபவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
புத்தளம் மாவட்டத்தில் கடந்த 26 வருட காலமாக ஒரு முஸ்லிம் பாராளுமன்றப் பிரதி நிதித்துவமில்லை,ஒரு இலட்சத்துக்கு அதிகமான முஸ்லிம் வாக்குகள் இருந்த போது மக்களின் ஒற்றுமையின்மை மற்றும் கட்சி அரசியல் சார் சிந்தனைகளினால் பாராளுமன்ற பிரதி நிதித்துவம் எட்டாக்கணியாக இருந்துவருகின்றது.
வடக்கில் இருந்து நாம் வெளியேற்றப்பட்டு வந்த போது புத்தளத்து மக்கள் எமக்கு எல்லா வகையான உதவிகளையும் செய்தனர்.அவர்களுக்கு எம்மால் ஆன அனைத்து உதவிகளையும் செய்வேன்,ஆனால் கடந்த 5 வருட காலமாக என்னால் புத்தளம் மக்களுக்கு எவ்வித அபிவிருத்தி பணிகளையும் செய்ய முடியாமல் போனது அதற்கு உள்ளுர் அரசியல்வாதியின் செய்றபாடு காரணமாக அமைந்தது,இனியும்இந்த புத்தளத்து மக்கள் அபிவிருத்திகளில் பின்தள்ளுவதற்கு இடமளிக்க முடியாது,சமூகத்தின் நன்மை கருதி இழக்கப்பட்ட பாராளுமன்ற பிரதி நிதித்துவத்தை பெற்றுக்கொள்ளும் சாத்தியம் அதிகமாக இருப்பதால் முன்னாள் அமைச்சர் நவவி அவர்களை வேட்பாளராக நிறுத்தியுள்ளோம்,
எது எவ்வாறாக இருந்தாலும்,இம்முறை புத்தளம் மாவட்ட மக்கள் தமது பாராளுமன்றப் பிரதி நிதித்துவத்தை இன்ஷா அல்லாஹ் எமது பெற்றுக் கொள்வார்கள் என்பதை மகிழ்வுடன் கூறிக்கொள்ளவிரும்புகின்றேன்.
புத்தளம் நகர சபையின் முன்னாள் பிரதி தலைவர் அலிகான்,முன்னாள் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் .ஜ.எம்.இல்யாஸ்,அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் யாழ் மாவட்ட பிரதம அமைப்பாளர் எம்.அமீன்.புத்தளம் மாவட்ட அமைப்பாளர் உட்பட பலரும் இதன் போது சமூகமளித்திருந்தனர்.
கற்பிட்டி,நுரைச்சோலை,மதுரங்கு ளி,முந்தல்,உடப்பு,புத்தளம் உள்ளிட்ட பெரும் எண்ணிக்கையிலானவர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.






0 Comments