GOODFRIENDS முதன்முறையாக நாடளாவிய ரீதியில் இஸ்லாமியமார்க்கவிடயங்களில் தெளிவை ஏற்படுத்தும் நோக்கில் கேள்வி பதில் போட்டிநிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்து இந்த ரமழான் மாதத்தில் 30 நாட்களும் 30வினாக்கள் கேட்கப்பட்டது. சிறந்த வரவேற்பு இணைப் பெற்ற இந்த வினா விடைப்போட்டியின் தொகுப்பினை இங்கே பதிவிடுகிறோம். ஆர்வமுள்ளவர்கள் கலந்துகொள்ளலாம்.
அனைத்து கேள்விகளும் இஸ்லாமிய மார்க்க விடயங்களில் தெளிவை ஏற்படுத்தும் நோக்கில் அமைந்திருக்கும். வாசகர்கள் 30 கேள்விகளுக்குமான விடைகளை ஒன்றாக எழுதி தபால் உறையில் இட்டு 31-07-2015 ஆம் திகததிக்குள்எமது முகவரிக்கு கிடைக்கக்கூடிய வகையில் அனுப்பி வைக்க வேண்டும்.விடைகள் சங்கை மிக்க உலமாக்கலின் வழிகாட்டலில் திருத்தப்பட்டுவெற்றியாளர்கள் தெரிவு செய்யப்படுவார்கள். போட்டியின்இறுதியில்பெறுமதிமிக்க மூன்று பணப்பரிசில்களும் பத்து ஆறுதல் பரிசில்களும்வழங்கப்படும். வயது வேறுபாடுஇன்றி யாவரும் கலந்துகொள்ளலாம். மார்க்கவிடயங்களில் தெளிவை ஏற்படுத்துவதே இப்போட்டியின் நோக்கமாகும். ஆகவே,பொது மக்களின் நலன் கருதி மௌலவிமார்கள், மௌலவியாக்கள்கலந்துகொள்ள அனுமதிக்கப்படமாட்டார்கள்.
பரிசு விபரம்
முதலாவது பரிசு Rs 25,000
இரண்டாவது பரிசு Rs 20,000
மூன்றாவது பரிசு Rs 15,000
10 ஆறுதல் பரிசுகள்
30 வினாக்கள்
வினா இல: 01
நபி (ஸல்) - கதீஜா தம்பதியினரது பிள்ளைகள் எத்தனை பேர். அவர்களது பெயர்களைத் தருக?
வினா இல: 02
செல்வத்தாலும் உடலாலும் செய்ய வேண்டிய இபாதத் ஒன்றை தருக?
வினா இல: 03
கிப்லா மாற்றம் எந்த மாதத்தில் நடைபெற்றது?
வினா இல: 04
நோன்பின் நோக்கம் பற்றி அல்குர்ஆன் எந்த சூராவில் பேசுகிறது?
வினா இல: 05
இஸ்லாத்தின் எதிரியான அபூ ஜஹ்லினைக் கொன்ற இரு சிறுவர்கள் யாவர்?
வினா இல: 06
நோன்பின் சமூக ரீதியான ஒரு பயன்பாட்டை தருக?
வினா இல: 07
ரசூல் (ஸல்) அவர்கள் சுமார் எத்தனை மாதங்கள் மஸ்ஜிதுல் ஆக்ஸ்சாவை நோக்கி தொழுதார்கள்?
வினா இல: 08
தொழுகை மனிதனில் ஏற்படுத்த விரும்பும் மாற்றம் எது?
வினா இல: 09
உஸ்மான் (ரழி) அவர்களது காலத்தில் அல்குர்ஆன் தொகுக்கப்பட மூல காரணமாக அமைந்தயுத்தத்தின் பெயர் என்ன? இதனை கலீபாவிடம் முறைப்பட்ட ஸஹாபி யார்?
வினா இல: 10
அல்லாஹ் மலக்குமாரை மனிதனுக்கு சிரம்தாழ்த்த சொல்வதன் அடிப்படை காரணம் என்ன?
வினா இல: 11
உஸ்மான் (ரழி) அவர்களால் பிரதி செய்யப்பட்ட அல்குர்ஆன் பிரதிகள் அனுப்பி வைக்கப்பட்ட 4இடங்களைத் தருக?
வினா இல: 12
முத்தபகுன் அலைஹி என்ற பதமானது ஹதீஸ் கலையில் எந்தக் கருத்தில் பிரயோகிக்கப்படுகிறது?
வினா இல: 13
முஜ்தஹித்களின் படித்தரங்களைத் தருக?
வினா இல: 14
இஸ்லாமிய அகீதாவின் முக்கிய பிரிவுகள் நான்கையும் குறிப்பிடுக.
வினா இல: 15
அண்மையில் இலங்கையில் சிங்களத்துக்கு மொழிமாற்றம் செய்யப்பட்ட தப்ஸீரின் பெயர்?
வினா இல: 16
முஃதா போராட்டத்தில் தலைமைப் பொறுப்பை ஏற்று ஷஹீதாகிய மூன்று ஸஹாபிகளதும்பெயர்களைத் தருக.
வினா இல: 17
பத்ர் போராட்டம் இடம்பெற உடனடிக் காரணமாக அமைந்த நிகழ்வு எது?
வினா இல: 18
புத்ர் போரின் போது நேருக்கு நேர் மோதுவதற்கு நபியவர்களால் அனுப்பப்பட்ட மூன்று ஸஹாபாக்களும்யாவர்?
வினா இல: 19
நியாயமான காரணமின்றி தபூக் போருக்கு செல்லாத மூன்று ஸஹாபிகளினதும் பெயர்களைக்குறிப்பிடுக.
வினா இல: 20
நபியவர்களின் காலத்தில் பாராளுமன்றம் போன்று மக்காவிலும் மதீனாவிலும் செயற்பட்ட இடங்கள்யாவை?
வினா இல: 21
நபி (ஸல்) அவர்களின் வஹியினை எழுதுபவர்களாகப் பணியாற்றிய நான்கு ஸஹாபாக்களைக்குறிப்பிடுக.
வினா இல: 22
லைலதுல் கத்ர் இரவில் வீஷேடமாக பூமிக்கு இறங்கும் மலக்கின் பெயர் என்ன?
வினா இல: 23
அளவை நிறுவையில் மோசடி செய்தவர்களுக்கு அனுப்பப்பட்ட நபி யார்?
வினா இல: 24
இஸ்லாத்தை ஏற்பதை மஹராக வழங்க சம்மதித்த நபித்தோழர் யார்?
வினா இல: 25
நபி (ஸல்) அவர்கள் தமது வாழ்க்கையில் எத்தனை தடவை உம்ரா செய்தார்கள்?
வினா இல: 26
தொழாதவர்களுக்காக இறைவன் சித்தப்படுத்தி வைத்திருப்பதாகக் கூறும் நரகத்தின் பெயர் என்ன?
வினா இல: 27
அல்லாஹ்வின் 27 பண்புகளை குறிப்பிடும் சூரா எது?
வினா இல: 28
அல்-குர்ஆனில் அதிக தடவை இடம்பெற்றுள்ள நபியின் பெயர் என்ன?
வினா இல: 29
அல்லாஹ் அல்-குர்ஆனில்; ஆகுமாக்கிய ஆனால் அவன் வெறுக்கின்ற ஒரு செயல் எது?
வினா இல: 30
ஜக்காத்துள் பித்ரா கொடுக்கப்பட வேண்டிய கால எல்லையை குறிப்பிடுக.
போட்டியாளர் விபரமும் விடைப்பத்திரமும்
முழுப்பெயர்:
முகவரி:
வயது:
தே.அ அட்டை இல (இருந்தால்):
தொலைபேசி இல:
இ-மைல் (இருந்தால்):
போட்டி பற்றிய உங்கள் கருத்து:
30 கேள்விகளுக்குமான விடைகள்:
அனுப்ப வேண்டிய முகவரி
GOOD FRIENDS Ramadan Quiz 2015
7/1, Sirigal Mawatha,
Kohuwala,
Sri Lanka.
வெற்றியாளர்கள்
GOOD FREINDS இன் ட்விட்டர் ஊடாகவும் ( <type> Follow GoodFriendsLk <and send to> 40404 )அறிவிக்கப்படுவார்கள்
ஓவ்வொருவருக்கும் ஒரு திசையுண்டு, அவர்கள் அதன் பக்கம் திரும்புபவர்களாக உள்ளனர்,நற்செயல்களின் பால் நீங்கள் முந்திக் கொள்ளுங்கள்; நீங்கள் எங்கு இருப்பினும் அல்லாஹ்உங்கள் யாவரையும் ஒன்று சேர்ப்பான். நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்களின்மீதும் பேராற்றல் மிக்கோனாக இருக்கிறான். [திருக்குர்ஆன் 2:148]
- ஏற்பாட்டுக்குழு -


0 Comments