அபு அலா -
கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் மு.காவின் அட்டாளைச்சேனை அமைப்பாளரும் அதி உச்சபீட உறுப்பினருமாகிய ஏ.எல்.எம்.நஸீரின் முழு முயற்சியினால் நேற்றிரவு திங்கட்கிழமை (20) அட்டாளைச்சேனை பிரதான வீதியில் தேர்தல் காரியாலயம் திறந்து வைக்கப்பட்டது.
கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் மு.காவின் அட்டாளைச்சேனை அமைப்பாளரும் அதி உச்சபீட உறுப்பினருமாகிய ஏ.எல்.எம்.நஸீரின் தலைமையில் இடம்பெற்ற இந்த திறப்பு விழா நிகழ்வுக்கு மு.கா சார்பில் ஐக்கிய தேசியக் கட்சி பொதுத் தேர்தலில் போட்டியிடுகின்ற முன்னாள் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம்.ஹரீஸ், பைசால் காசிம் ஆகியோர்களுடன் கட்சியின் உயர் பீட உறுப்பினர்கள், போராளிகள் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர், உறுப்பினர்கள் உலமாக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் தேர்தலில் போட்டியிடுகின்றவர்களினால் தேர்தல் தொடர்பான கண்னி உரையும் இடம்பெற்றது.









0 Comments