இந்த உலக வாழ்வு ஒன்றுக்கொன்று தொடர்புள்ள வினைகள் எதிர்வினைகளால் இயல்பாகவே இயக்கப் பட்டுக் கொண்டிருக்கின்றது...!
எங்கள் எண்ணங்கள், பேச்சுக்கள், செயற்பாடுகள், உயரிய குண நலன்கள், நல ஒழுக்கங்கள்,பண்பாடுகள், பிரார்த்தனைகள், இறையச்சம், உளத்தூய்மை, பெரும்தன்மை, பொறுமை, சகிப்புத் தன்மை, மனிதாபிமானம், ஜீவ காருண்யம், அன்பு, கருணை, அனுதாபம், அர்ப்பணம், தன்னம்பிக்கை, துணிவு, வீரம், பிறருக்கு உதவும் தயாளத் தன்மை, அடுத்தவர் சுக துக்கங்களில் பங்கெடுத்தல், அடுத்தவர் உணர்வுகளை மதித்தல், என இன்னோரன்ன நேரிடையான பண்புகளே எமது வாழ்வின் வசந்தங்களை வடிவமைக்கின்றன, அவைதான் எமது சுற்றுச் சூழலில்,குடும்ப , சமூக தேசிய வாழ்வில் எமக்கு பிரதி பலித்து பிரதிபலன்களை கொண்டு வருகின்றன.
ஒரு விசுவாசி மற்றுமொரு விசுவாசிக்கு கண்ணாடி போன்றவன் என்பது நபி மொழி, குறை நிறைகளை சுட்டிக்காட்டுவது, அவற்றை தமக்கு மட்டும் சுட்டிக் காட்டுவது போன்ற உடனடி விளக்கங்கள் அதற்கு தரப்பட்டிருக்கின்றன, அதற்கப்பாலும் மேலே சொன்ன எமது உயர் குணங்களின் ஆன்மீக பண்பாட்டு பக்குவங்களின் அன்றாட பிரதிபலிப்புக்களை மிகச் சரியாக வாழ்வின் சகல படித்தரங்களிலும் மற்றுமொரு விசுவாசியிடமிருந்து கண்டு கொள்ள முடியும் என்பதனையும் இந்த நபி மொழி உணர்த்துகிறது.
இவ்வாறான உயரிய ஆன்மீக பண்பாட்டு பக்குவமிக்க தனிநபர்கள், குடும்பங்கள் சமூகங்கள் தான் "கைர உம்மத்" மிகச் சிறந்த சமூகம் என வர்ணிக்கப்படுகிறது, அதேபோன்றே அத்தகைய பண்பு ஒழுக்கங்கங்களுக்கு நேர் எதிரான அல்லது எதிர் மறையான அம்சங்கள் கொண்டோரின் வாழ்வு பாழடைந்த வீடாக, வறண்டு போன நிலமாக சோபை இழந்து காணப்படும்.
இறையச்சமினமை, உளத்தூய்மை இன்மை, பெருமை, பொறாமை பேராசை,சுயநலம், உலோபத்தனம், அடுத்தவரை மதியாமை, பழிவாங்கும் மனப்பான்மை, விட்டுக் கொடாமை, அடுத்தவர் சுக துக்கங்களில் பங்கு கொள்ளாமை, அடுத்தவர் உணர்வுகளை மதியாமை, பகைமை பாராட்டல், அடுத்தவர் குறை தேடல், கோல் புறம் போய் பேசல், அகங்காரம்,அகம்பாவம், குரோதம்,நய வஞ்சகம் கோழைத்தன்மை, என கொடிய உளவியல் கோளாறுகள் நடத்தைகளில் பிரதிபலிக்கின்ற பொழுது மறுமை வாழ்வு மட்டுமல்ல இன்மை வாழ்வும் இருண்டு போய் விடுகின்றது.
நான் உயரிய பண்பொழுக்கங்களை நிறைவு செய்வதற்காகவே அனுப்பப்பட்டுள்ளேன் என அருமை நாயகம் முஹம்மத் (ஸல்) அவர்கள் சொன்னதோடு அத்தகைய பண்பாடுகள் அற்றவர்கள் என்னைச் சேர்ந்தவர்கள் அல்லர் என்றும் மிகத் தெளிவாக அழகாக பல செய்திகளை சொல்லியுள்ளார்கள்.
அதனால் தான் நன்மையான காரியங்களில் முந்திக் கொள்வோருக்கு இரட்டிப்பான நன்மைகள் இருக்கின்றன என அல் குரானும் ஹதீசுகளும் உணர்த்தி நிற்கின்றன, ஏனெனில் அதன் நல்ல பிரதிபலிப்புக்கள் அடுத்தவரிடம் இருந்து வெளிப்படுகின்ற பொழுது அவற்றிற்கான நன்மைகளில் எமக்கும் பங்கு இருக்கிறது.
சிறிய ஒரு உதாரணம்: நீங்கள் சந்திக்கும் ஒருவரை மலர்ந்த முகத்துடன் முஸ்லிம் ஆக இருந்தால் ஸலாம் சொல்லியும் பிர மதத்தவராக இருந்தால் ஒரு சிறந்த வளத்தையும் சொல்லி அதன் பிரதிபலிப்பை பார்த்துக் கொள்ளுங்கள்.. எடுத்ததெற்கெல்லாம் அடுத்தவரை குறை கூறும் நாம் எமது தனிப்பட்ட குடும்ப சமூக வாழ்வில் சுற்றுச் சூழலில் நிம்மதி சந்தோஷம் அங்கீகாரம் அமைதி சமாதனம் நிலவுவதனை பெரும்பாலும் நாமே தீர்மானித்துக் கொள்கின்றோம் என்பதனை முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும்.
இஸ்லாம் கூறும் உயரிய ஒழுக்க விழுமியங்கள் குறித்த ஒரு திருமறை வசனத்தை, ஒரு ஹதீஸை, ஒரு -முஸ்லிம்
இந்த உலகம் ஒன்றுக்கொன்று தொடர்புள்ள வினைகள் எதிர்வினைகளால் இயல்பாகவே இயக்கப் பட்டுக் கொண்டிருக்கின்றது...!
எங்களது விசுவாசம், இறையச்சம், நம்பிக்கைகள், ஆன்மீக பண்பாட்டு பக்குவங்கள், எங்களது வழிபாடுகள், தான தர்மங்கள், மனிதாபிமானம், உயரிய நற்குண நல ஒழுக்கங்கள், பணிவு, அடக்கம், பொறுமை, பெரும் தன்மை,விட்டுக் கொடுத்தல், மன்னித்தல், அடுத்தவர் உணர்வுகளை புரிந்து கொள்தல், உறவுகளை பேணுதல், பெற்றாரை உற்றாரை, கற்றாரை,பெரியாரை மதித்தல், கோபம் கொள்ளாமை, பொறாமை கொள்ளாமை, காழ்ப்புணர்வு, நயவஞ்சகமின்மை, நீதி , நேர்மை , உண்மை ,வாய்மை எல்லாமே எங்களது சொந்த சுக வாழ்விற்கும் சக வாழ்விற்கும் ஈருலக வெற்றியிற்கும் மாத்திரம் தான்.
அதேபோன்றே மேலே சொல்லப்பட்டவையின் எதிர்மறைகளும்...!
நாங்கள் தான் முழுமை பெறுகின்றோம்....இவற்றை ஏன் பேருக்காகவும் புகழுக்காகவும் செய்து பிரதிபலன்களை இழந்து கொள்ள வேண்டும்..? அதற்காகவே அல்லாஹ்விற்காக மாத்திரம் இறை திருப்தியை நாடி நாம் உளத்தூய்மையுடன் அவற்றை செய்கின்றோம், அந்த உளத் தூய்மையும் எங்களுக்குத்தான்...
அடியார்களிடம் அல்லாஹ்விற்கு எந்த வித தேவையும் கிடயாது....மாமிசங்களோ, இரத்தங்களோ அல்லாஹ்வை சென்றடைவதில்லை எண்ணங்களும் இறையச்சமுமே அவனை அடைகின்றன...
இவற்றில் குறைகள் ஏற்படுகின்ற பொழுது அல்லாஹ் எங்களை மன்னித்து விடலாம் ஆனால் ஒவ்வொரு ஆன்மாவும் தாம் சம்பாதித்துக் கொண்டவற்றின் பிரதிபலன்களை விளைவுகளை அனுபவித்தேயாக வேண்டும்.!
உதாரணமாக நாங்கள் நடந்து கொள்வதைப் போன்றே நடாத்தப் படுவோம்....விதைத்தவற்றையே அறுவடை செய்துகொள்ள முடியும்....புகைத்தல் பாவம் என்று தெரிந்தும் புகைக்கின்றோம்..அல்லாஹ் மன்னித்துவிடலாம்..ஆனால் புற்று நோய் வந்தால் அதனையும் நாம் பொருந்திக் கொள்ள வேண்டும்.
இந்த உலகம் ஒன்றுக்கொன்று தொடர்புள்ள வினைகள் எதிர்வினைகளால் இயல்பாகவே இயக்கப் பட்டுக் கொண்டிருக்கின்றது...!
பின்னர் பாவ மன்னிப்பு தேடிக் கொள்ளலாம், இன்னும் வயது இருக்கிறது தானே, அல்லது இன்று மட்டும், என்றெல்லாம் உள்ளங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்ளலாம், எமது தப்புத் தன்டாக்களுக்கு நியாயம் தேடிக் கொள்ளலாம்..ஆனால் விளைவுகளை பெரும்பாலும் இவ்வுலகில் சந்தித்து தானே ஆக வேண்டும்..!
உயரிய ஆன்மீக பண்பாட்டு பண்பொழுக்கங்களால் அழகிய மலர்களும், நறுமணங்களும் நிறைந்த நந்தவனங்களாக எமது வாழ்வின் வசந்தங்களை சொந்தமாக்கிக் கொள்ள எல்லாம் வல்ல அல்லாஹ் எமக்கு தவ்பீக் செய்வானாக..!


0 Comments